Posts

Showing posts from April, 2014

தெய்வங்கள்

தெய்வங்கள்

சிந்தை யது மங்கும்.....

சிந்தை யது மங்கும் சித்தம் மழுங்கி நடுங்கும் வித்தை செய்யும் மனதால் விடியும் வரை கலங்கும் சொந்தமும் தள்ளி வெறுக்கும் சொல்லைக் கேட்க மறுக்கும் சந்தங் களின் றின்றி சரீரம் அதிரக் கத்தும் வேந்தன் முதல் வீரன் வேட்கை யுள்ள யாரும் விரும்பி அருகில் வந்தால் வெட்டித் தலை சாய்க்கும் எங்கும் இருள் பரவி இருட்டாய் மனதுள் இருக்கும் அருகில் வர பயந்தே ஆட்டமாய் ஆடி ஒடுங்கும் தூக்க மின்றித் தவித்தே துயரம் கொள்ளும் மனிதன் தீர்க்க வரும் நிகழ்வால் துயரம் பறந்தே போகும் (கவியாழி)

நட்பை நானும் மறக்கவில்லை

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை (கவியாழி)

குழந்தைப் பாட்டைப் பாடுங்கள்

பூஜ்யமும் ஒன்றும் ஒன்று புவியில் பிறந்திட்டாய்  இன்று 0+1=1 ஒன்றும் ஒன்றும் இரண்டு அப்பா அம்மா இரண்டு 1+1=2 இரண்டும் ஒன்றும் மூன்று உன்னோடு சேர்த்து மூன்று 2+1=3 மூன்றும் ஒன்றும் நான்கு பாப்பா பிறந்தால் நான்கு 3+1-4 நான்கும் ஒன்றும் ஐந்து தாத்தா பாட்டியும் ஐந்து 4+1=5 ஐந்தும் ஒன்றும் ஆறு நண்பனைச் சேர்த்தால் ஆறு 5+1=6 ஆறும் ஒன்றும் ஏழு புறப்படும் நேரம் ஏழு 6+1=7 ஏழும் ஒன்றும் எட்டு படிப்பில் கவனத்தை எட்டு 7+1=8 எட்டும் ஒன்றும் ஒன்பது தூங்க செல்வாய் ஒன்பது 8+1=9 ஒன்பதும் ஒன்றும் பத்து உணரும் வயதும் பத்து 9+1=10

ஏற்காட்டில் செய்த சமூக நலப்பணிகள்

Image
    1980 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது  NCC,NSS  போன்ற சமூகப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே   வாய்ப்புக் கிடைத்ததால் நான் பல முகாம்களில் பங்குகொண்டு கிராமங்களுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ,மாணவர்களுக்கு கல்விப் பற்றிய அறிவுரைகள் கோவில்களுக்கு வெள்ளையடித்தல் சாலை வசதி மேம்பாடு போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளில் நாட்டம் ஏற்பட்டது, எனக்கு ஏற்பட்ட சமூக சேவை ஈடுபாடு காரணமாக சேலத்தில் இயங்கி வந்த சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கத்தில் உறுப்பினரானேன் .அங்கு பல சமூக சேவைகள் செய்யும் நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது இதன் காரணமாக இதையே நாம் தொடர்ந்தால் என்ன என்ற எனக்குள் மனதில்  ஏற்பட்ட கேள்வியின் காரணமாகவே பின்னாளில் ஏற்காட்டில் எனக்கு சமூக சேவை செய்யும் எண்ணத்திற்கு தூண்டுகோலாய் இருந்தது.       1986 ம் ஆண்டு நிரந்தர அரசாங்க பதவி நான் விரும்பிய எற்காட்டிலேயே காப்பீட்டுத்துறை வளர்ச்சி அதிகாரியாக நிரந்தர வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டேன்.பணி நிமித்தமாக நான் எல்லா வங்கிகளுக்கும் சென்று வந்ததால் என்னைப் போன்ற இளையோர்களுடன்சேர்ந்து பழகும் வாய்ப்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்..... அம்மா வாழ்ந்த காலத்திலும் அடிமை யாக இருந்ததில்லை அப்பா தாத்தா பாட்டியிடம் அன்பாய் இருக்கத் தவற வில்லை எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து எந்த முடிவும் செய்திடுவார் இல்லா நிலையிலும்   உள்ளதையே இனிமை யாகச் சொல்லிடுவார் வசதி யான வாழ்க்கைக்கு   வெளியில் வேலைக்குச் சென்றதில்லை வருவோர் போவோர் நண்பரிடம் வீட்டுச் சண்டையைச் சொன்னதில்லை இப்போ நிலைமை மாறியது இனிமை வாழ்வும் மறைந்ததுவே.. தப்பாய் எண்ணும் பழக்கத்தால் தனியாய்ச் செல்லும் நிலையானது பிரிந்தே வாழ்ந்து வந்தாலும் பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும் இருந்தும் சண்டை வருகிறதே இல்லற வாழ்வும் கசக்கிறதே அமைதி யான  வாழ்க்கைக்கு அன்பாய்ப் பரிவாய்ப் பேசுங்கள் அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்

நான் பார்த்த ஏற்காடு

எனது முதல் ஏற்காடு பயணம்          நான் ஏற்காடு முதலில் சென்றது )சைக்கிளில் (மிதிவண்டி)அதாவது ஒரு ரூபாய் கொடுத்து பேருந்திலோ அல்லது சுமையுந்திலோ மேலே வைத்துவிட்டு மலையில் உள்ள ஏரிக்கு அருகில் இறங்கி அங்கு ஊர் சுற்றிவிட்டு பின்னர் மிதிவண்டியி லேயே இறங்கி வரவேண்டும்  என எனது அண்ணன் சித்தப்பா மகன் சந்திரசேகர் கூறினார். ஏறக்குறைய இருபத்து மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் உன்னால் தைரியமாய் வர முடியுமா என்றார்       அப்போது வயது பதினேழு இருக்கும்  எனக்கு மனதில் பயம் இருந்தாலும் உடனே சரி போகலாம் என்று சொல்லி சனிக்கிழமை விடுமுறை என்பதால் அன்றே செல்லத் தீர்மானித்தோம் .நான் படிக்கும்போதே எனது படிப்புச் செலவுக்காக எனது தாய் தந்தையரை துன்புறுத்தாமல் நானே சுயமாக சம்பாத்தித்து வந்தேன் அதனால் என்னிடம் எப்போதும் சேமிப்பு வைத்திருப்பேன் அதிலிருந்து இருபது ரூபாய் செலவு செய்வது என தீர்மானித்து விரும்பியபடியே சென்றேன்.        பேருந்தில் இரண்டு ரூபாய் பயணக் கட்டணம் ஒருரூபாய் மிதிவண்டிக்கு  ஒரு ரூபாய் என(2+1=3) மூன்று ரூபாய் இருவருக்கும் ஆறு ரூபாய் செலவு செய்து காலை 8.00 மணிக்குப் புறப்பட்டு ஒருமணி ந

இன்பசுற்றுலா - ஏற்காடு

Image
"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு  "            ஏழைகளின் ஊட்டி  என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் சேலம் நகரிலிருந்து  முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருபது கொண்டை  ஊசி வளைவுகளுடன்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850  அடி உயரத்தில்  இருக்கிறது ஏற்காடு  ஏரியின் எழில் மிகுத் தோற்றம்       நான் 1981-1992 வரை ஏற்காடு பகுதியில் நான் பணிபரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன்.அன்று பணி நிமித்தமாக நான் சுற்றித் திரிந்த நாட்களில் இருந்த தோற்றம் இன்று காலப்போக்கில் மாறி விட்டது. தற்போது நிறைய தங்கும்  விடுதிகள் கட்டப்பட்டு போக்குவரத்தும் மிகுதியாகி இருக்கிறது.அதற்கேற்றாற்போல் சாலை வசதியும் மேம்பட்டிருக்கிறது இந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து செல்லும் உபரி நீரே கிள்ளியூர் நீர்வீழ்சியாய்  கொட்டிக் கொண்டிருந்தது  தற்போது  ஏரியில் நீர்மட்டம் குறைந்ததும்  அருவி இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களாய் மட்டுமே உள்ளது         இந்த முகத்துவாரத்தில்  உள்ள நீரேற்றும் நிலையத்தின் வாயிலாக இங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்க

சித்திரை மகளே வருக.........

சித்திரை மகளே வருக சீர்மிகு வாழ்வைத் தருக சீரிய பணிகள் செய்தே சிறப்புற ஆசியும் தருக கற்பனை செய்யும் அறிவை காலமும் எனக்குத் தருக கற்றதில் உள்ள குறையை கற்கத் தெளிவைத் தருக அற்ப மனித பிறப்பில் அன்பாய் நாளும் இருக்க அப்பன் ஆத்தா ஆசிரியராய் அறிவை இன்னும் தருக உலகில் உள்ள உயிர்கள் உயர்வாய் என்றும் இருக்க உழவன் வாழ்வை சிறக்க உடனே மழையைத் தருக எத்தகு பணியும் எளிதில் ஏற்றம் கிடைக்கச் செய்து எளிமை வாழ்வை  வாழ என்னுடன்  துணையாய்  வருக நேசமும் நட்பும் சூழ்ந்தே நிறையாய் வாழ்க்கை வாழ நித்திரை நாளும் கிடைத்து நிம்மதி மனதில் தருக (கவியாழி)

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க....

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க விடிந்ததும் சொல்லுறேன் தூங்கிடுங்க சுத்தமாய் எனக்கு விருப்பமில்லை சொல்வதைக் கேட்டு உறங்கிடுங்க மிச்சமாய் எதுவும் தரவேண்டாம் மேனியில் கையும் படவேண்டாம் அச்சமாய் இருக்க வழியில்லையே  அவங்களும் நமக்குத் துணையில்லையே கூச்சமாய் எனக்கு இருக்குதுங்க குறுகுறுன்னு எதுவோ ஓடுதுங்க பேச்சினால் என்னை மடக்காதீர் பிள்ளைக்குத் தெரிஞ்சா தவறில்லையா மச்சினி இன்னும் ரகசியமாய் மருமகள் இருந்தும் தெரிந்தவளாய் துச்சமாய் எண்ணியே அவங்களெல்லாம் தினமும் அடிக்கடி நடக்கிறதாம் உங்களைப் பத்தித் தெரிந்துதானே உடம்புல வலியும் மறந்துநானே உள்ளுக்குள்ளே பயமாய் இருப்பதாலே உடனே தள்ளிப் போயிடுங்க சத்தியம் சொல்லி செய்யுறேண்டி சங்கதி எதுவும் செய்யுலடி மிச்சமும் தடவி அமுக்கிடுறேன் முன்னம்போல் உடம்பும் இருக்குமடி இப்பவே கழுத்து பரவாயில்ல இடுப்புல வலியும் அதிகமில்ல சுத்தமா முதுகுல வலியில்ல சத்தியம் இன்னைக்குக் காத்திட்டிட்டீங்க -----கவியாழி----- (வயதாகி விட்டால் இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)

ரசித்தவர்கள்