தெய்வங்கள்

தெய்வங்கள்

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார்
.( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்)

திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார்.

சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அவரது  வீட்டை அடைந்தோம். புலவர் அய்யாவுக்கு ஆச்சரியம் என்ன இப்படி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள்  என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


சிறிது நேரம் பேசிக்கொண்டிருத்தப்பின் எனக்கு அவசர அழைப்பு வந்ததால் நான் வெளியில் சென்று விட்டேன் .அய்யாக்கள் மூவரும் உரையாடி மகிழ்ந்தார்கள்..பின்பு மாலையில் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.அடுத்து திரு.பாலகணேஷ்  அவர்களையும் பார்க்க வேண்டுமென்றார்

பின்னர் எனது வீட்டில் கணேஷ் அவர்களின் வருகைக்காக காத்திருந்து கணேஷ் வந்ததும் மூவரும் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு மூவரும் தனித்தனியே சென்றது  இப்போதுதான் சொல்ல முடிந்தது.

தமிழ்க் குழும நண்பர்களே  நீங்களும் சென்னை வந்தால்  இங்குள்ள பதிவர்களிடம் தகவல் தெரிவித்தால் இதுபோல  இன்னும் சில பதிவர் நண்பர்களையும் பேசி மகிழலாம்.

வாருங்கள் சென்னைக்கு............


.......கவியாழி.......
Comments

 1. மகிழ்ச்சியான சந்திப்பிற்கு வாழ்த்துக்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டி நேரிலும் தொலைபேசியிலும் அடிக்கடி உரையடிவரும் தங்கள் பண்பு பாராட்டுதற்குரியது. எனது பதிவில் உடல் நலமில்லை என்று லேசாக குறிப்பிட்டதற்கே உடனே தொடப்பு கொண்டு விசாரித்தமைக்கு நன்றி கண்ணதாசன் சார். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது அனுபவப் பதிவாளர்கலான ரமணி ஐயா,செல்லப்பா ஐயா,புலவர் ஐயா அனைவருக்கும் என் வணக்கங்கள்

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா

  சந்திப்பு இனிதாக நடைபெற்றமை மிக்க மகிழ்ச்சி ஐயா இதைப் போன்ற சந்திப்புக்கள் மேலும் நடைபெற எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. வலைப்பதிவர் என்ற முறையில் உங்கள் நால்வரையும் ஒருசேர வண்ணப்படத்தில் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

  // ஓட்டலில் (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) //

  என்ன சொல்ல வந்தீர்கள் என்று தெரியவில்லை!

  ReplyDelete
 4. உங்கள் அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சி!
  த.ம.4

  ReplyDelete
 5. இனிய சந்திப்பு... வாழ்த்துக்கள்...

  எங்க ஊரில் சந்திப்பு எப்போது...?

  ReplyDelete
 6. இனிய நண்பர்கள் சந்திப்பு. தொடரவாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. சந்திப்புகள் இனியான நினைவுகள்...!

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. உவகை தரும் உன்னத சந்திப்பு!

  எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
 10. மகிழ்ச்சி தரும் சந்திப்புக்கள் குறித்து பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி!

  ReplyDelete
 11. சகோதரருக்கு வணக்கம்..
  இனிய சந்திப்பைக் காணும் போது உள்ளம் ஆனந்தத்தில் திளைக்கிறது சகோதரரே.. அருமையான சந்திப்பு அனைவரும் தங்கள் பொன்னான நேரம் ஒதுக்கிச் சந்தித்து கொண்டது அருமை. தொடருவோம் என்றும் கூறியிருப்பது மேலும் மகிழ்ச்சி.. பகிர்வுக்கு நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. ரமணி அய்யா தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நிழற்படத்தை விட இளமையாகத் தெரிகிறாரே!

   Delete
 12. இணைய நட்பு ,இதய நட்பாய்வளரட்டும் வாழ்த்துக்கள் !
  த.ம 9 confirmed !

  ReplyDelete
 13. தொடரட்டும் வலைப்பதிவர் சந்திப்புகள்....

  த.ம. 10

  ReplyDelete
 14. தொடரும் சந்திப்புகள் பற்றி அறிய மகிழ்வாய் இருக்கிறது. நல்ல நட்புக்கள் என்றுமே இனிமையாய் தொடரும் சக்தி படைத்தவை!!

  ReplyDelete
 15. மகிழ்ச்சியான சந்திப்பு குறித்து சந்தோஷப் பகிர்வு....
  வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 16. இனிய சந்திப்புக்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. இவ்வாறான சந்திப்புகள்
  பதிவர் உறவைப் பலப்படுத்தும்
  தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
 18. சந்திப்புகள் தொடரட்டும்
  அன்புறவு வலுப்படட்டும்
  நன்றி ஐயா

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more