தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்லறை வரையில் துணையே.......

இதயம் அடிக்கடித் துடிக்கும்
இமையும் இணைந்தே அடிக்கும்
கருவைச் சுகமாய்ச் சுமக்கும்
கருவறை சிறையாய் இருக்கும்

பிறந்ததன் கதைகளைச் சொல்லி
பெரியவர் வரையில் தொடர்ந்து
உழைக்கும் மனித வாழ்க்கை
உறவுகள் இணைந்தால் சிறக்கும்

இளமைக் கனவுகள் பலிக்கும்
இணைந்ததும் சுகமாய் இருக்கும்
பிறவிப் பலனை அடைந்தே
பெரியவராக்கி உண்மையைச் சொல்லும்

உறவுகள் தொடந்தே வாழும்
உரிமைகள் மகிழ்ந்தே தொடரும்
பிரிவைத் வெறுத்தே ஒதுக்கும்
பிள்ளைகள் இணைந்தால் மகிழும்

கடனே இல்லா வாழ்க்கை
கடந்தும் இருந்தால் நன்று
கல்லறை வரையில் துணையே
கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி


(கவியாழி)

Comments

 1. வணக்கம்
  ஐயா.

  கவிதையை படித்த போது மனதில் உவகை கொண்டேன் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. "கடனே இல்லா வாழ்க்கை
  கடந்தும் இருந்தால் நன்று
  கல்லறை வரையில் துணையே
  கிடைத்தால் வாழ்க்கை மகிழ்ச்சி" என்ற
  வழிகாட்டலை எல்லோரும் பின்பற்றுவோம்!

  ReplyDelete
 3. மீண்டும் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் என்பது மகிழ்ச்சி யளிக்கிறது. சரி, இந்த ஆண்டும் உங்கள் கவிதைப் புத்தகம் (ஒன்றாவது) வெளியாகும் அல்லவா?

  ReplyDelete
 4. //கடனே இல்லா வாழ்க்கை
  கடந்தும் இருந்தால் நன்று
  கல்லறை வரையில் துணையே
  கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி//
  அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நினைப்பதுதான்,கிடைக்கவேண்டுமே?சிலருக்கு கைவரப்பெறுகிறது சிலருக்கு ,,,,,,,?

   Delete
 5. கடனே இல்லா வாழ்க்கை
  கடந்தும் இருந்தால் நன்று

  நல்ல கவிதை..

  ReplyDelete
 6. கடனே இல்லா வாழ்க்கை
  கடந்தும் இருந்தால் நன்று

  அருமை

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்