தெய்வங்கள்

தெய்வங்கள்

சொல்வீரே... நல்லோரே...

இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து
இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே

பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து
புகழை மட்டும் சொல்வீரே

நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே
நட்புடன் வாழச் சொல்வீரே

எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து
எதையும் மகிழ்ந்தே சொல்வீரே

தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து
தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே


(கவியாழி)


Comments

  1. இருப்போர் கொடுத்தால் இல்லார் நலமே... நல்லோர் சொல் நாளும் நலமே...
    ஐயா எனது நகைச்சுவை பதிவு காண்க..
    தயம.2

    ReplyDelete
  2. நற்கவிதை. பாராட்டுகள்...

    த.ம. 3

    ReplyDelete
  3. வாழும் வாழ்க்கை வளம்படக் கருத்தை
    வளரும் தமிழில் சொன்னீரே!
    வையம் வாழ உய்யும் வழிகள்
    வாகாய் எடுத்துச் சொன்னீரே!
    சூழும் பகைகள் சுழற்றும் கவலை
    சுதந்திர ராகச் சொன்னீரே!
    சூடும் சொற்கள் சுடுதல் இல்லா
    சுடர்மொழி யாகச் சொன்னீரே!
    பாழும் பொழுதென் றொன்றும் இல்லை
    பகுத்தறி வூட்டிச் சொன்னீரே!
    பாகின் வார்த்தை வாழ்த்தைப் பேசிப்
    பயனடை யென்றுஞ் சொன்னீரே!
    ஆழும் மொழியில் அழகுச் சிந்தனை
    அணியணி யாக்கித் தருவீரே!
    அடைவோம் நாங்கள் அருந்தமிழ்த்தேனை
    அகமகிழ்ந் துண்ணத் தருவீரே!

    அருமையான பாடல் அய்யா!
    இன்னும் பல பாடல்களைத் தாருங்கள்!
    காத்திருக்கிறோம்.
    நன்றி!

    ReplyDelete
  4. எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து
    எதையும் மகிழ்ந்தே சொல்வீரே

    வரிகள் அனைத்தும் அழகு

    ReplyDelete
  5. சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
  6. நல்ல யோசனைகஉள்.

    ReplyDelete
  7. நல்லதே சொல்வோம்
    நல்லதே செய்வோம்
    நன்றி ஐயா
    தம 5

    ReplyDelete
  8. நல்ல வார்த்தை சொல்வதே மனதிற்கு நன்மை பயக்கும். நம் சூழலும் அவ்வாறு அமையும். என் நண்பர் ஒருவர் நல்ல வார்த்தைகளையே பேசுவார், பேசும்படிக் கூறுவார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டு அதனைக் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  9. நல்ல கருத்துக்கள் ஐயா...

    ReplyDelete
  10. எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து
    எதையும் மகிழ்ந்தே சொல்வீரே//

    உண்மை, எல்லா நாளும் நல்ல நாளே!

    ReplyDelete
  11. நன்று! தொடர்க!

    ReplyDelete
  12. நல்லதைச் சொன்னீர்கள்
    அதையும் நன்றாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்