தெய்வங்கள்

தெய்வங்கள்

திரு.சிங்கநெஞ்சம் சம்பந்தம் அவர்களுடன் சந்திப்பு

                                                      

      இன்று  03.02.2019 ஞாயிறு  காலை 11 மணி அளவில் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அடையார் பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது துணைவியாரும் முகமலர வரவேற்றார்கள்.கடற்கரை அருகில் இருந்ததால் நகரின் சத்தமின்றி அமைதியான வசிப்பிடத்தில் கணவன் மனைவி இருவரும் சிறிதுநேரம் அறிமுகம் செய்துகொண்டு இருவரின் பிறப்பிடம் ,படிப்பு,வாழ்விடம் குடும்பம் பற்றிய செய்தி பரிமாற்றங்களுடன் நான் அய்யா அவர்களை சந்திக்கும் நோக்கம் பற்றி எடுத்துரைத்தேன் அவரும் முகமலர்ந்து அவரது அனுபவத்தைக் கூறினார்.இந்திய அரசுபணியில் இருந்ததால் தான் பல ஊர்களுக்கு மாறிமாறி வந்ததாகவும் சென்னையிலேயே கடற்கரை அருகில் தனது வசிப்பிடத்தை விரும்பி அமைதுக்க் கொண்டதாகவும் கூறினார்கள்.


        மேலும் அவர் தம் பணிசெய்த நாட்களில் நடந்த அனுபவங்களைப் பற்றியும் கடந்துவந்த நாட்களையும் அழகிய தமிழ் மொழியில்  அடிக்கடி திருக்குறள் உதாரணங்களை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்கள்.நான் அவரிடம் கற்கால மனிதர்களின்குணங்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.

                          


      பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்த போர்த்துகிசிய,டச்சுகாரர்களின் வருகைப் பற்றியும் அவர்களின் வணிக நோக்கம் ,சமய வழிபாடு பற்றியும் கூறினார்.மேலும் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகை மற்றும் ஆட்சியில் வாழ்க்கைமுறை,கலாசாரம்,வியாபாரம்,ஆட்சிமுறை மற்றும் பண்பாடு ,அவர்களின்ஆவணப்படுத்துதல்,சாலைபோக்குவரத்து  மற்றும் கல்வியில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினோம்.

     அய்யா அவர்களின் தமிழ் ஆர்வம் மடைதிறந்த வெள்ளமாய் திருக்குறள்,சங்ககால இலக்கியம் ,கம்பராமாயணம் ,மகாபாரதம் பற்றிய அவரது ஆழ்ந்த  நுண்ணிய கருத்துக்கள் மற்றும் அதில்  குறிப்பிடப்படும் கதைகளில் சம்பவங்கள்  அனைத்தும் வாய்வழிச் செய்திகளாகவே இருந்திருக்கின்றன என்பது போன்ற பல உதாரணங்களுடன் தெளிவுபடுத்தினார்.

    நான் படிக்காத எனக்குத் தெரியாத பல செய்திகள் அய்யா அவர்களின்இரண்டுமணி நேர  சந்திப்பில் கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது.குறிப்பாக இலக்கியம்,தமிழர்களின் வாழ்க்கைமுறை , மண்வளம் ,மலைவளம் ,நீராதாரம் பற்றியும் புவியியல்  சார்ந்த பல தகவல்களை தெரிந்துகொண்டேன்


........கவியாழி...........


Comments

ரசித்தவர்கள்