தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழ் மரபுவழிப் பயணம்


        17.03.2019  அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  தமிழ் மரபுவழித் தேடி 36 பேர்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால்  பயணம்  ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி  எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம்.




பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான



கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை  வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் தரையில் கால் வைக்கமுடியாத நிலையில் பலரும் தயக்கம் காட்ட வெளியிலேயே அய்யா ஸ்ரீதரன் அவர்கள் விரிவாக விளக்கினார். பின்னேர் ஒவ்வொருவராக தாவித்தாவி( பாவம் பெண்களும்) ஒருவழியாய் உள்ளே சென்றால் அனைவருக்குமே முகத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் இருந்ததை ஒவ்வொருவரின் முகத்திலும் கண்டேன்.
 

ஸ்ரீதரன் அய்யாவோடு திரு.காந்தி அவர்களும் திரு.அருள்தாசு அவர்களும் விரிவாக எடுத்துரைத்தது மகிழ்ச்சியாய் இருந்ததுடன் இதையெல்லாம் இதுவரை தெரியாமலிருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும்வருத்தமும்  இருந்தது.மதியம் மூன்று மணிக்குமேல் அங்கிருந்து கிளம்பி மாலை நான்குமனிக்குதான் அனைவரும் உணவருந்தமுடிந்தது.
   

அடுத்ததாக  ஆற்காடு அருகிலுள்ள ஆறுவழிச் சாலையிலேயே டெல்லி கேட் என்னுமிடதிற்கு சென்றோம்.பின்னர் மாமண்டூர் இரவு 7.30க்கு சென்றடைந்தோம்.இருட்டிவிட்ட காரணத்தினாலும் அங்குள்ள இருட்டிலும் அங்குள்ள இளையோர்களின் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கின் உதவியுடன்  கண்டு மகிழ்ந்தோம்.

   எனக்கும்  வாய்பளித்த குழுவிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியுடன்....


(கவியாழி.கண்ணதாசன்)










Comments

  1. அருமையான பயணம் ஐயா... படங்கள் அருமை...

    ReplyDelete
  2. அருமையான பயணம். படங்களும் நன்றாக வந்துள்ளன.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. சிறப்பான பயணம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. என்றென்றும் நினைவில் நிற்கும் பயணம்

    ReplyDelete
  5. பயணங்கள் தொடரட்டும் கவிஞரே

    ReplyDelete
  6. குடைவறைக் கோவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ... நன்றி!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete
  7. எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் இடங்கள் இவை இத்தனை பார்க்காமல் தவற விட்டிருக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்