தெய்வங்கள்

தெய்வங்கள்

தினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....

அறிவைத் திருடும் கூட்டம் எங்கும்
அகிலம் முழுக்க போடும் ஆட்டம்
பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி
பேயயைப் போல பிழைப்பாய் வாழும்

உறவாய் பழகி உணர்வைத் தூண்டி
உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும்
உடையோர் இருக்க ஒளிந்தே வாழும்
உலக மெங்கும் பயந்தே ஓடும்

பிழையாய் தடத்தை பதியம் போட்டே
பேதைமை மறந்தே நட்பாய் பேசும்
விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து
வேதனையோடும்  வீரத்தை காட்டும்

தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித்
தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும்
தீர்வினை காண மக்களைக் கொன்று
தினமொறு நாடகம் உலகில் தோன்றும்

வளமைச் சொல்லி வளங்களைத் திருடி
வையகம் முழுதும் பசியைப் போக்கும்
பிழையை அறிந்தும் புத்தரைப்போல
பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும்

செழுமை இல்லா முகத்தைக் காட்டி
செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும்
சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால்
சோதனை என்றே விரைந்து ஓடும்

.........கவியாழி கண்ணதாசன்......
          சென்னை.......22.08.2020Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்