மாற்றம் உண்மைதான்
மனித இனத்திற்கு அவசியம்
மாற்றம் தேவை தான்
காலை மாலை இரவு
கனவு மகிழ்ச்சி துயரம்
வேலை தவறா உணவு
வேண்டிய நேரம் தூக்கம்
ஓடி உழைத்த கால்கள்
ஓய்வு கேட்கும் நேரமும்
பாடித் திரிந்த நாட்களை
பள்ளிக்கி பிரிந்த உறவுகள்
நேரம் தெரியாமல் நினைவிழந்து
தூரம் தெரியா பயணங்கள்
துயரம் மறந்த தருணங்கள்
தூரம் சென்று விடுவதைத்தான்
துன்பம் மட்டும் தொடர்வதேன்
தூக்கம் குறைந்து வருவதேன் ?
கவியாழி கண்ணதாசன்
26/09/2026
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...