Posts

Showing posts with the label / கவிதை/சமூகம்/

தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே அறிவில் சிறந்த முல்லைகளே பண்பேக் குறையா செல்வங்களே பாசம் மிகுந்த மொட்டுகளே நல்லப் பிள்ளை அனைவருமே நன்குப் பேசி மகிழுங்களே அன்பு பாசம் அறிவையுமே அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே மாலைப் பொழுதில் விளையாடி மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே மனதில் உள்ள எண்ணங்களை மதித்து உணர்ந்து செய்யுங்களே நல்ல நல்லக் கதைகளையும் நல்லோர் சொன்ன கருத்துகளும் நாளும் படித்து வாருங்களே நாட்டில் சிறந்து வாழுங்களே அன்னைத் தந்தை சொல்வதிலே அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள் ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன் (கவியாழி)

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இப்படியும் என்னை வாழ்த்தியோர்

அன்புள்ள நட்புகளுக்கு அடியேனின் வணக்கம் கடந்த 24.04.2013 அன்று நான் எழுதிய 'நான் புலமை அறிந்தப் புலவனில்லை" என்ற கவிதைப் பற்றி கருத்து கூறியவர்களில் பலர் என்னை கவிஞரே ,பாவலரே,புலவரே என்றும் அருமையாக எழுதுவதாகவும்,தொடருங்கள் என்றும் எல்லா இலக்கணமும் உள்ளடங்கியுள்ளது என்றும் எழுத்துப் பிழை உள்ளதென்றும் முயற்சி தொடரட்டும் என்றும் வாழ்த்தியவர்கள் வணங்கியவர்கள் பலபேர் இருந்தாலும் கருத்தே கூறாமல் இருந்த நல்ல உள்ளங்கள், இனிய நண்பர்கள் நான் பெரிதும் மதிக்கும் நல்லோர்க்கும் எனது பணிவான வேண்டுகோள்" தொடர்ந்து படியுங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கரம்கூப்பி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன். மேலும் தளத்துக்கு பெயர் வேண்டும் என்ற காரணத்தினாலேயே கவியாழி என்று பெயர் வைத்து எழுதி வந்தேன். இந்தப் பெயர் வைக்க காரணம் கவிதையை ரசிக்கும் யாழின் இசை  ரசிகன் என்ற வரியின் சுருக்கமே "கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இ

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....

ரசித்தவர்கள்