முதுமையில் இளமை ......
பாகம் இரண்டு ...
...................................ஆம் நான் வழக்குரைஞராக பணியாற்ற விரும்பும் நோக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சென்றேன் .அளவற்ற ஆசைகளுடன் நேரம் போவது தெரியாது நிறைய பேரைச் சந்திக்கலாம் ,உரையாடலாம், என்று பெரும் கனவுகளுடன் சென்றேன்.ஆனால் முதலில் ஏமாற்றம் போலவே தெரிந்தது. நான் மாலை நேர வகுப்பில் {சேர்ந்து படித்ததினால் என்னுடன் படித்த யாரேனும் வருவார்களா என்று தேடினேன் தேடினேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் வசிக்குமிடத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தொலைவில் இருப்பதால் நேரடியாக செல்வதில் சிரமம் இருந்தது.முன்பெல்லாம் பணி ஓய்வுப்பெறுவதுக்குமுன் எங்கு சென்றாலும் மகிழுந்துதான் செல்வதற்கு வசதியாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. இருச்சகக்கர வாகனத்தில் சென்று அங்கிருந்து நகர்புற தொடர்வண்டியில் செல்லும் நிலைக்கு ஆளானேன். அங்கிருந்து சிறிது நேரம் நடந்து செல்லவேண்டும்
ஏனோ தெரியவில்லை என்னக்குள் இருந்த ஆணவம் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியம் எல்லாமே சுக்கு நூறாகிவிட்டது. காரணம் என்னைபோலவே நிறைய பேர் ஏறக்குறைய ஒரு லட்சம் செலவு செய்து பதிவு செய்து வாய்ப்புக்காக காத்துக்கிடந்தனர். நீதிமன்ற வளாகத்தில் பெரும்பாலானோர் சொந்தகதை சோகக்கதை நடந்தது ,நடப்பது,நடக்கவிருப்பது போன்றவற்றை மட்டுமே பேசி வந்தார்கள்.
வாய்ப்பு வருமென நம்பி தினமும் வந்து செல்வோரும் வழக்காடு மன்றத்தில் நடைபெறும் வாக்குவாதங்களை குறிப்பெடுப்போரும் இருந்தனர்.இதில் ஆண்களும் பெண்களும் இருந்தனர்.இதில் வருத்தமான இன்னொரு பக்கம் வருங்கால இளைய சந்ததியினரும் வாய்ப்புக்காக காத்திருந்தது வருத்தமாக இருந்தது.நான் எனக்குள் அறுபது வயதுவரை வாழ்ந்து முடிந்த திருப்தி இருந்தாலும் ,அவர்களை நினைத்து வருத்தமாக இருந்தது காரணம் அவர்கள் இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறார்கள் நாம் ........
கவியாழி....
உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..
ReplyDeleteமயக்கமா...? கலக்கமா...?