Posts

Showing posts with the label கவிதை /சமூகம்/கேள்வி

தெய்வங்கள்

தெய்வங்கள்

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி கடனாய்த் தந்தவன் ஒருவன் கருவே உருவாகி வளர்த்தும் கடமை என்றே கொடுத்தால் உடமைப் பொருளும் பிடுங்கி உணவாய்த்  தின்பவள் ஒருத்தி உரிமை  கொண்டாடி மகிழ உடலைத்  தந்த அவனும் உயிரைக் கொடுத்தும் மயங்கி உற்றார் மறுத்த பிள்ளை பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா இதனை எல்லா மதங்களும் இழித்தே கூறி வந்தாலும் எப்படி மகிழ்ந்து வாழ்வாய் ஏனோ மறந்தாய் இகழ்வாய் மனிதன் மட்டும் இதனை மறந்தே வாழச் சொல்லும் கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே ...............கவியாழி..........

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய் மேல்சாதி நானென்று  சொல்கிறான் மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான் ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான் ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான் உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும் உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும் உத்தமனாய் சாதியை வளர்க்கிறான் உதவாத காரியத்தைச் சொல்கின்றான் சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான் சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான் இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில் இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான் இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான் இவனெல்லாம் இன்ன சாதியென்று எத்தனை நாள் இப்படியேச் சொல்லி எல்லோரையும் பிரித்துப் பார்க்க என்சாமியும் துணைக்கு வருகிறதோ எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ .......கவியாழி........

ரசித்தவர்கள்