சின்ன சின்ன மொட்டுகளே
 சின்னச் சின்னப் பிள்ளைகளே  சிரித்து மகிழும் முல்லைகளே  வண்ணப் வண்ண பூக்களைப்போல்  வந்தே சிரிக்கும் வாண்டுகளே   நல்ல  நல்ல கதைகளை  நாட்டில் நடக்கும் செய்திகளை  வானில் மின்னும் நட்சத்திரம்  வட்ட நிலவைப் பற்றியுமே   தேனாய் இனிக்கும் வார்த்தையிலே  தினமும் சொல்லி வந்திடவே  தோளில் ஏறித் தினந்தோறும்  தொல்லை செய்யும் செல்வங்களே   குருவிக் காக்கை கொக்குபோல்  குனிந்தும் தாவியும் ஆடவைத்து  குழவி குழவி மகிழ்ச்சியாக  கொள்ளை கொள்ளும் உள்ளங்களே   எல்லை இல்லா கேள்விகளை  எளிதில் புரிந்தே தெரிந்திட்டால்  கொள்ளை இன்பம் கொண்டேநீ  கொஞ்சி நன்றி சொல்வீரே    2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்   ^^^^^^கவியாழி^^^^^^^