மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....
 மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே  மறுத்துப் பின்னால் வருந்தாதே  புகழ்ச்சி மிகுந்து மயங்காதே  பிறகு மயங்கி துடிக்காதே   கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே  தொலைத்து விட்டுக் கலங்காதே  கிட்டும் வாய்ப்பை விலக்காதே  கலங்கி உயிரைப் போக்காதே   உழைத்து வாழ மறுகாதே  உயர்வு உனக்குக் கிடைக்காதே  ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ  உறங்கி வாழ்வை இழக்காதே   தொடுத்த சொல்லால் துணையைநீ  தொடரும் சொந்தம் முடிக்காதே  தொலைத்து விட்ட வாழ்கையே  தேடிச் சென்றும் கிடைக்காதே   பெண்கள் கல்வி கொடுக்காமல்  பிறந்த வாழ்வைக் கெடுக்காதே  பிறப்பை தவறாய் நினைக்காமல்  படிப்பைத் இடையில் நிறுத்தாதே   கெடுத்தும் வாழ்வு வாழாதே  கெட்டப் பின்பு துடிக்காதே  கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே  கொடுக்கும் நன்மை உணர்வாயே?