நல்லவராய் வாழ்ந்திடுவோம்....
 எண்ணத்ததைத் தூய்மையாக  எப்பொழுதும் வைத்திருந்தால்  எல்லோரும் மகிழ்ச்சியாக  இன்பமாக வாழ்ந்திடலாம்   சொல்லுவதைச் செயலாக்கி  சொன்னபடி வாழ்ந்திருந்தால்  செல்வமது நிலைத்திடுமாம்  சொந்தமெனத் தாங்கிடுமாம்   உள்ளமதில் கள்ளமின்றி  உண்மையாகப் பேசிவந்தால்  தொல்லையில்லா வாழ்க்கையாக  தொடர்ந்திடலாம் எப்பொழுதும்   அன்புடனே அறநெறியும்  அடுத்தவருக்கு உதவியுமே  இன்பமெனச் செய்திட்டு  இருப்பதையுமே கொடுத்திடலாம்   நண்பனையும் அன்புடனே  நன்னடத்தைச் சொல்லிவந்தால்  நன்றியுடன் இருந்திடுவான்  நல்லபடி வாழ்ந்திடுவான்   உள்ளவரை எச்செயலும்  உயர்வதற்காய் செய்தாலும்  நல்லவையே செய்திடுவோம்  நல்லவராய் வாழ்ந்திடுவோம்   (கவியாழி)