பொங்கலைக் கொண்டாடுவோம் .....
    உலகத்துத் தமிழரெல்லாம்   ஒற்றுமையாய்ச்   சேர்ந்திருந்து   தமிழன்னை மகிழ்ந்திடவே    தவறாமல் பொங்கல் வைப்போம்     நல்லோரை நாடிச் சென்று   நல்வாழ்த்து சொல்லிடுவோம்   நம்மக்கள் மனம்மகிழ   நாடிச் சென்று உதவிடுவோம்     புத்தாடை  தனையுடுத்தி    புதுப்பானை பொங்கலிட்டு   தலைக்கரும்பு மஞ்சளுடன்   தலைவாழை இலைபோட்டு     உலகாளும் சூரியனுக்கும்   உழவனுக்கும் நன்றி சொல்வோம்   உயரும் வழி என்னவென்று    உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்