Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சீக்கிரமா வாங்க..........

Image
        வலைப்பதிவர்களின் எழுச்சித் திருவிழா நீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னை எழுதத்தூண்டிய எழுச்சிமிகு திருவிழா இந்த வருட வலைபதிவர்கள் சந்திப்புத் திருவிழா -2015.   ஆம் மிகவும் மகிழ்ச்சியான இந்த வருட சந்திப்பு கடந்த நாட்களை விடச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமென நம்புகிறேன்.  காரணம் விழா ஏற்பாட்டாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் வழிகாட்டல் விழாவை சிறப்பான பாதையில் செல்வது புரிகிறது . மேலும் நாளொரு பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு முயற்சியிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே எண்ணுகிறேன். அதோடு மட்டுமல்லாமல் போட்டிகள், அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை . என்னால் பங்கேற்க முடியாவிட்டாலும் வலைப்பதிவர்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது .    வலைச்சித்தரும், கரந்தையாரும்  கொடுக்கும் ஒத்துழைப்பு  மற்றும் ஆதரவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த வேதனை தருகிறது .இருந்தாலும் இந்த வருடம் 300 பதிவர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியுடன்  ஆர...

என்னடா வாழ்க்கையிது.......

விலைவாசி குறையலை வருமானம் வழியில்லை பிள்ளைக்குட்டி பொம்பளைக்கும் பசியைப் போக்க முடியில விவசாயம் சரியில்லை வேறவேலை தெரியலை பொழைப்புக்கான வழியில்லை போறதெங்கே  புரியலை பண்ணாட்டுக் கம்பனிகள் பயன்படுத்தும் மெசினுனால பகலிரவு உழைப்புக்கு பணிக்கு ஆளை எடுக்கலை அம்மாவும் கேட்கலை  அப்பாவும் கொடுக்கலை அடுத்தமாச பீசுநானும் கட்டலை அதனாலே பள்ளிக்குமே போகலை பணம்காசு உள்ளவன்  பதுக்கிப் பதுக்கி வைக்கிறான் பணியாளர் மட்டுமே -வரியை பயத்தோடக் கட்டுறான் லஞ்சக் காசுலே வாழுறான் லட்சங்களில் கேட்கிறான் வசதியாக வாழ்வதற்கு  வழிப்பறியும் செய்யுறான் என்னடா வாழ்க்கையிது எத்தனைபேர் நாட்டிலே சொன்னதாய் பலநிகழ்ச்சி சோகமாய் உள்ளதடா (கவியாழி)

எனது நண்பன்

Image
கண்ணாலே கதை சொல்லும் கயவன் கண்டவுடன் வாலாட்டும் துணைவன் பண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை பார்த்ததுமே கத்துகின்ற மடையன் வேண்டுமென்றால் அருகில் வந்து  வேடிக்கையாய் விளையாடிச் செல்வான் வேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து  விழிதிறந்து என்னவென்று கேட்பான் கத்தாதேஎன்றாலும் நிறுத்தாமல் குறைப்பான் காக்காகுருவிடனும் விளையாடத் துடிப்பான் கன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால் கண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான் மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான் மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான் திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான் தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான் அன்பாய் இருப்பான் அருகில் வருவான் பண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும் துன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும் நண்பன் இன்னும் சிலநாள் மட்டும் (கவியாழி)

மார்கழி மலரே வா

Image
மார்கழிப் பூவை சூடியதால் மங்கையே மயக்கம் வருகிறதா  மன்னவன் என்னிடம் ஏன் மலருக்கே  தயக்கம் வருகிறது தேனிக்களும் வண்டுகளும் தேனிசை ராகமாய் பாடுகிறது மயிலும மானுமே மகிழ்ந்து  மகிழ்ச்சியாய் இங்கு  ஓடுகிறது நங்கையே நல்லமுதே சுவையே நானருந்த உனக்கு  நானமே நாழியும் கடப்பதாய் கோபமோ நல்விருந்து படைக்கிறேன் வா என் அருகில் நீயும் வா என் மடியில் சாய்ந்திடவா நின் இதழ் எனக்குத் தா  நிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா

சொந்தவூர் செல்லுவேன்

சொந்தவூர் செல்லுவேன் சொந்தங்களைக் காணுவேன் சேர்ந்திருந்த நாட்களையே சொர்கமாக எண்ணுவேன் நண்பர்களைத் தேடுவேன் நல்லபடிப் பேசுவேன் நான்படித்த நாட்களிலே நடந்ததையே  யோசிப்பேன் ஆசிரியரைக் காணவும் ஆசிபெற்று  மகிழவும் நேசமுடன் நட்புடனே நீண்டநேரம் தங்குவேன் வந்தவேலை முடிந்ததும் வாழ்ந்த நாட்கள் எண்ணியே நொந்து நானும் வருந்தியே நேரத்தோடு திரும்பி செல்லுவேன் (கவியாழி)

முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

சாதியெனும் பட்டத்தைத் தலைமீது தந்ததா சக்தி வாய்ந்த எதிரிகளால் வளர்ந்து வந்ததா மோதிவரும் கூட்டமெல்லாம் உழைக்க மறுப்பதால் முன்னோர்கள் சொன்னதென வளர்த்து வருவதா பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா மீதியுயிர் போகும்வரை வெட்டிச் சாய்ப்பதால் மீண்டுவரும் பயனையாரோ மகிழ்ச்சிக் கொள்வதா? பாடுபட்டுச் சேர்ந்து வாழும் கூட்டம் மட்டுமே பகலிரவாய் அன்பு கொண்டு கூடிவாழுமே நாடுவிட்டு நாடுபோவோர் அந்த நாட்டிலே நாகரீக போர்வையாலே சொல்ல மறுப்பதேன்? வேளாண்மை  நம்தொழிலாய்ப் போற்றி வாழ்வதால் வேலைவெட்டி யில்லா நிலைமை மாறியே ஏழைகளும் ஒற்றுமையாய் சேர்ந்து வாழவே ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே! அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால் அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே! படிப்பறிவு நிறைந்திருக்கும் இந்தநாளிலும் பகைமையோடு வாழ்வதனால் பயனும் இல்லையே முடிவேடுப்பீர் வாழும்வரை உண்மை நிலையினை முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே! (கவியாழி)

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே  கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியொழுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!! (கவியாழி) 21.12.2012 ன் மறுப்பதிவு

ரசித்தவர்கள்