Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பிள்ளையாரப்பா! புத்திசொல்லப்பா!!

Image
வினையேதும் செய்யாமல் விதியென்று சொல்லாமல் துணை நிற்க வேண்டாமல் துறவறமும் பூண்டாமல் பண்ணெடுத்து பாடாமல் பகிர்வின்றி வாழாமல் மனிதனை நினைக்காமல் மதப்பற்று கொள்ளாமல் இருப்போர்கள் இல்லாதோர்க்கு இமியலவே நினைதிட்டால் விதையேதும் போடாமல் விளைச்சலையும்  தேடாமல் மனதோடு மனிதமும் மற்றவர்க்கு உதவியும் இல்லாத ஏழைக்கு எழுத்தறிவும் தந்திட்டால் பொல்லாங்கு சொல்லமாட்டார் புறந்தள்ளி பேசமாட்டார் கனபோளிதில் செய்திட்டால் கணபதியே அருள்புரிவான் எல்லோருக்கும் இனிய பிள்ளையார் தின வாழ்த்துக்கள் இராம.கண்ணதாசன் சென்னை

அரசாங்க ஊழியன்

அரசாங்க ஊழியன் அரைகஞ்சி குடிச்சாலும் அன்றாடம் வருமானவரி கட்டாமல்  இருந்தால் சிரமபட்டாவது கட்டிவிட வேண்டும்-இல்லையெனில் சீக்கிரமே கட்டாமல் செத்துவிட வேண்டும் நடுத்தர மக்களுக்கு நாய் பொழப்பு நாகரீகமென நகையும் நல்லுடையும் நல்லகல்விக்கு நாயக அலையவேண்டும்-ஆனாலும் நாதியத்து வேலைக்கு போகவேண்டும் அகத்தில் கவலையும் முகத்தில் பவுடரும் அடுக்கில் சாப்பாடு அளவோடு இருக்கவேண்டும் அடுத்தவனுக்கு வசதியாய் காட்டவேண்டும்-மீண்டும் அடுத்தவேளை சோறில்லாமல் கிடக்கவேண்டும் பளபளக்கும் நகைனட்டு போடவேண்டும் பித்தளைக்கு தங்கபூச்சு போடவேண்டும் வாகனமும் கடனாக வாங்க வேண்டும்-வட்டியுடன் வசவும் கேட்டு தலைகுனிய வேண்டும் பெண்டுபிள்ளை குடியிருக்க வீடு வேண்டும் பெண்டாட்டி புகழ் ஓங்க வாழவேண்டும் கையூட்டு பெறாது இருக்க வேண்டும்-நேர்மையான கடன்காரன் என்று புகழ் பாட  வேண்டும் இப்படியே இருந்தாலும் இருப்பதை கொண்டு தப்பேதும் செய்யாமல் சிக்கனமாய் இருந்தாலும் கற்பனையாய் பேசுவார் கண்டபடி ஏசுவார்- முடிவில் நற்பயனை வேண்டி நாதியத்து  செத்திடவேண்டும்

என் தங்கை

  தங்கை                 *** என்னை துணைக்கு எப்போதும் சார்ந்திருப்பாள் எப்போதும் என்னுடனே கை கோர்த்து நடந்திடுவாள் தப்பே செய்தாலும் அப்பாவிடம் சொல்ல மாட்டாள் தனியாக என்னைவிட்டு கரிசோறும் தின்ன மாட்டாள் சிக்கல் கழித்துவிட்டு  தலை சீவி மகிழ்ந்திடுவாள் எப்போதும் என்னுடனே எதிர்வாதம் செய்திடுவாள் அப்பாவித்தனமாய் அழுதிடுவாள் அண்ணனை காணவில்லையென சின்ன காயம் பட்டாலும் எனக்கு சிரித்துக்கொண்டேகேவி கேவி அழுதிடுவாள் இப்போதும்  இருக்கிறாள் எரிந்து எரிந்து விழுகிறாள் பெற்ற பிள்ளைகளையும் பிணமாகி பொங்கல் என்கிறாள்  கோவத்தில் ஆனாலும் என்னை பார்த்தவுடன் அடங்க மறுத்து அழுகிறாள் தேனாக இருந்த நாட்கள் திரவமாகி விஷமாகி போனாலும் தெரியலையே  அவளை மறக்க தெரிகின்ற உயிர்போகும் நாள்வரை ஊனாகிவிட்டேன் ஊமையாகிவிட்டேன் கானது அவள் துயரை கண்டவுடன் தொடரும் துயரத்தை தொலைக்க முடியுமா? மறுபடியும் அண்னாக பிறக்க முடியுமா? பிறந்தாலும் அன்றுபோல் இருக்க முடியுமா? இராம.கண்னதாசன் சென்னை

இளைப்பாற மடி வேண்டும்

Image
உன்னை பார்க்க வேண்டும் உன்னுடன் பழக வேண்டும் மடிமீது படுக்க வேண்டும் மனக்கவலை விலகவேண்டும் இதமாக நீ வருடவேண்டும் இளைப்பாறி நான் மகிழ வேண்டும் தலைகோதி தழுவ வேண்டும் தலை சாய்ந்து படுக்க வேண்டும் எல்லா கவலையும் மறக்க  வேண்டும் என்னுடனே நீ சேர வேண்டும் தடையில்லா இன்பம் வேண்டும் தழுவி தழுவி சுவைக்கவேண்டும் இதழ் முத்தமும  வேண்டும் இடையிடையே பேசவேண்டும் முக்கனிசாறுதடன்  பருக வேண்டும் முதலாய்  இருப்பதாக நினைக்க வேண்டும் புதிதாக நீ நினைக்க வேண்டும் பூவுலகில் மெய்மறந்து பறக்க வேண்டும் எந்நாளும்  இருக்க வேண்டும் எப்போதும் மகிழ்ச்சி வெண்டும்

என் மகளே!

துள்ளி விளையாடி தோள்மீது சிந்தும் கிள்ளியும் கேலி செய்தும் நீ நல்ல சிரிப்பும் நகையாடிய பொழுதில் கள்ள சிரிப்பும் கும்மாளமும்  பிடித்தது மெல்ல அருகில் வந்து மெதுவாய் சொல்லிய வார்த்தைக்கு  நூறு  பதில் அள்ள அள்ள குறையாத அன்புக்கு தெள்ள தெளிவாய்  பதில் சொன்னேன் நல்லதும் கெட்டதும் நாட்டில் நடப்பதும் உள்ளது உள்ளபடியே உரைத்தேன் சொன்னேன் செல்ல கிளியே செந்தமிழ் மொழியே உள்ளம் இனிக்குது உன்னால் மகிழ்ந்தது சொன்னதும் செய்தாய் சிரிப்போடு இருந்தாய் சொர்கமை இருந்தது சொந்தமாய் முத்தம் கன்ன குழிவிழ கண்சிமிட்டி சிரிதாயே கண்ணினின்மொழி பேசி மகிழ்ந்தாயே என்னை சீன்டியதும்இடைமறித்து உன்னை திட்டியதாய் உள்வாங்கி கண்ணை கசக்கி கடும் கோபமுடன் அன்னையையும் அடித்தாய் அழுதாயே அத்தனையும் நடந்தது அமுதுன்னும் பித்தில்லா பிள்ளை பருவத்தில் சித்தனாக பித்தனாக நானிருந்தேன் சிறிதும் கொபமில்லாது மகிழ்ந்தேன் முப்பது மாதம் தான் முடிந்தது முன்பருவ பள்ளியில் சேர்த்தபோது முடியாது மறுத்து அழுதாய்  பின் முகமலர்ந்து தொடங்கினாய் படிப்பை அன்றே உரைத்தது அவ்வளவுதான் அன்பால் அடித அடியும் மறந்தது அன்பால் கடித்தது கட்டி பிடித்தது அன்பாய்  சிரி

எனக்கு வேண்டும்

எனக்கும் ஆசை எப்படியும் முடியுமென என்னவள் மறுக்கிறார் என்னசெய்யலாம்? ஆசையும் இருப்பதால் அது முடியுமா என்று ஒவ்வொரு நாளும் உள்ளம்தான் சொல்லுது இந்தமுறை இருக்கலாம் என்று? சொல்லி பார்த்தேன் சொந்தமாய் வேண்டுமென்று! எள்ளி நகைகிறாள் என்னை இன்னும் முறைக்கிறாள்! பள்ளி படிப்பும் பள்ளியறை இல்லையென்றால், என்ன செய்வேன் எப்படி கொஞ்சுவேன்? கண்ணே மணியே கண்ணனின் மகனே என்று!!! இராம.கண்ணதாசன் சென்னை

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியோளுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!!

ரசித்தவர்கள்