Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்

அப்பனுக் கிணையாக உலகில் ஆயிரம்த் தெய்வமும் உண்டோ ஆண்டவன் என்று சொன்னால்-முதலில் அப்பனையே நாளும் தொழுவேன் கற்பனைக் கெட்டாத கனவுகளுடன் கைபிடித்து நடக்கச் செய்து கண்விழித்துக் கதைசொல்லி-தினமும் கருத்துக்கள் ஆயிரம் சொல்வார் வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார் போர்கலம் தான் வாழ்க்கையென-தினம் புலர்ந்ததும் சொல்லி வைத்தார் ஏற்பதும் படிப்பதும்  வாழ்க்கையென எப்போதும் சொல்லியே வளர்த்தார் எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை எடுத்துரைத்தே  படிக்க வைத்தார் சொல்லாத வார்த்தையை செய்கையில் செய்துகாட்டி புரிய வைத்தார் இல்லாமை இல்லையென-திறமை இருப்பதை  காட்டி வளர்த்தார் அறிவையும் அன்பையும் வளர்த்து ஆணவம் என்பதை வெறுத்து துணிவையும்  தூய்மையும் கொடுத்து-மனதில் துணையாக எப்போதும் இருந்திடுவார் ஆயிரம் வார்த்தையில் அடங்காது ஆணவம் எப்போதும் தோன்றாது அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள் அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்

விதியை மாற்றும் சாலைவிதி

தலைகவசம் அணியாதோர் தாங்கலாய் தேடிக்கொள்ளும் தலைவிதியே மரணம்              ----------- சாலைவிதியை மதிக்காமல் செல்லுகின்ற அன்பர்களே ஓலையின்றி  தேடிவரும் உத்தரவு மரணமே                 -------- விதிமறந்து  வேகமாய் வீதியில் சென்றால் மதிமயங்கும் இறுதியில் மரணமே கொடுக்கும்               --------- துர்மரணத்தை தேடியே தூங்கிக் கொண்டே தூரமாய் வேகமாய் வாகனம் செல்லும்             ----------- வீட்டிற்கு செல்லவே வாகனம் வேண்டும் விதிமாறி சுடுகாட்டிற்கு ஓட்டிச் செல்லாதே               ----------- குடும்பத்தை நினைத்து வாகனம் செலுத்து கூடிய மட்டும் வேகத்தைக் குறைத்து                --------- போதையில் வாகனம் போய்சேரும் இடமோ மருத்துவ மனை வளாகம்              ----------- விதியை வெல்ல வேகமாய் ஓட்டும் புரியாத நிமிடத்தில் பேராபத்து காத்திருக்கும்                ------------ இருசக்கர வாகனத்தை முறுக்கினால் இன்பமாம் இடையில் சறுக்கினால் இறுதியில் துன்பமாம்             ------------ விதியை மாற்றும் வேதனையை சேர்க்கும் மதிமயங்கி வேகமாய் மரணத்தை தழுவும்            ======

மனிதம் போற்றி வாழுங்களேன்.....

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

மழலையின் சிரிப்பு மத்தாப்பு

மத்தாப்பு பூத்ததுபோல் மழலையின் சிரிப்புதனை தப்பாக பேசமுடியுமா தவறாக சொல்லலாகுமா கத்தாளை உடம்புபோல காட்சியாக இருந்தாலும் கருப்பாக வழுக்கையாய் தூங்குமூஞ்சி ஆனாலும் சிட்டாக தாவிவரும் சிறுநீரை கழித்தாலும் மொட்டான மலர்களை திட்டத்தான் இயலுமா பூவைத்து பொட்டிட்டு புதுசட்டையும் போடாமல் புன்சிரிப்பாய் ஓடிவரும் பிள்ளைகளை பார்த்ததும் தொல்லைகளை மறந்து தோளில் சுமத்தியதும் மனதில் மகிழ்ச்சியை-யாரும் மறைக்கத்தான் முடியுமா

காரணம் நிச்சயம் பணமாமே

பாட்டிச் சமையலை புசித்தீரா பாட்டன் கதையை கேட்டீரா பணமும் அதிகம் செலவில்லை-உறவு பண்பே குறைந்தும் போவதில்லை அங்கும் இங்கும் அலைவதனால் அறமே மறந்து வாழ்வதினால் பண்பும் கெட்டு வாழ்கிறார்-இதையே படித்தவர் தானே செய்கின்றார் கற்பனையான வாழ்க்கைதனை காணத்தானே  தவறு செய்யும் சிற்சில மக்களின் தவறுகளால்-மகிழ்ச்சி சிதறிடும் வாழ்க்கை நியாயமா தேடி எங்கும் செல்லாமல் தெய்வம் வந்து சொல்லாமல் கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை கோடிப் புண்ணியம் கூடுமே பெற்றோர் துணையும் இல்லாமல் பிறிதொரு வாழ்க்கைத் தனியாக கற்பனை கொண்டவாழ்க்கைக்கு-உண்மைக் காரணம் நிச்சயம் பணமாமே

மீண்டும் சென்னைக்கே வந்துட்டேன்

அன்பான வலைத்தள நண்பர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் மூன்று வருடத்திற்கு மேலாக- பணிக்கு முடியாமல் தினமும் பயணமானேன் நீண்ட காலம் சென்றபின்னும் நேரம் கடந்து அங்கிருந்தேன் பகையான நட்புக்களால் தினமும் பரிதவித்துக் கண் கலங்கினேன் தாண்ட முடியா சிரமங்களும்-மனதில் தன்னிடமே கொண்டு வாழ்ந்தேன் தகையோரின் பெரியோரின் ஆசியாலே துயரமெல்லாம் தாங்கி நின்றேன் தயவாக வேண்டியே விண்ணப்பித்து தடம்மாறி மீண்டும் வந்திட்டேன் உயர்வான எண்ணத்துடன் -இங்கே ஊழியத்தை நன்றே செய்திடவே பகைமாறி பாசமும் நேசமும் பண்பாடும் நாகரீகம் போற்றியே நெடுநாளாய் நானும் காத்திருந்து -மகிழ்ச்சியாய் மீண்டும் சென்னைக்கே வந்திட்டேன்

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....

ரசித்தவர்கள்