உடல் முழுதும் வியர்த்தாலும்.....
(நன்றி கூகிள்) பாய்ந்து வரும் காளையது பார்தவுடன் வியந்து விடும் பருவமான உடல தனால் புகுந்து விளையாடி வரும் கருப்பு வெள்ளை நிறமாக காளையது துணிந்து நிற்கும் கன்னியரைக் கண்டுவிட்டால் கழுத்தை தூக்கி முட்டவரும் ஊர் முழுக்க நின்றாலும் உரியதையேத் தேடிவிடும் உள்ளமதைக் கொள்ளை யாக்கி உறவுக்காக் ஏங்கி நிற்கும் பரிதவிக்கும் நிலத்திலே பக்குவமாய் விதை விதைக்கும் பாத்தியிலே விதைத்து விட்டு பாதயதைத் தேடித் போகும் உருவமதைக் கண்டவுடன் உடல் முழுதும் வியர்த்தாலும் விதியதனை எழுதி விட்டு விரைவாகப் பதுங்கி விடும்