Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும் பயந்தே ஓடி மறைந்திடுமாம் பகைத்தே நாமும் அடித்தாலே பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டுமாம் வீணாய் நிலத்தைப் போட்டாலே விளையும் நிலமும் கெட்டிடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினாலே வேற்றுமை வந்தே பிரிக்குமாம் விசயம் இன்றி வாதிட்டாலே வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல் இருப்பதைக் கொடுத்தல் நலமாகும் எதிலும் பொறுமை இருந்தாலே எல்லா நலமும் கிடைக்குமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய்க் காரியம் கெடுக்குமாம் பாசம் கொண்டே பழகுங்கள் பகைமை எண்ணம் தவிருங்கள் நேசம் ஒன்றே ஒற்றுமையாய் நேர்மை வழியில் வாழ்ந்திடலாம் ********கவியாழி*******

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,

எனது மலேசியப் பயணம்

Image
       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.    இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது. -----கவியாழி---

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!

Image
நன்றி  !              நன்றி !!                     நன்றி !!! கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கள்                                                  =15 பதிவுகளின் எண்ணிக்கை                =350 பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000  இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன். -------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

ரசித்தவர்கள்