சித்திரை மகளே வருக.........
சித்திரை மகளே வருக சீர்மிகு வாழ்வைத் தருக சீரிய பணிகள் செய்தே சிறப்புற ஆசியும் தருக கற்பனை செய்யும் அறிவை காலமும் எனக்குத் தருக கற்றதில் உள்ள குறையை கற்கத் தெளிவைத் தருக அற்ப மனித பிறப்பில் அன்பாய் நாளும் இருக்க அப்பன் ஆத்தா ஆசிரியராய் அறிவை இன்னும் தருக உலகில் உள்ள உயிர்கள் உயர்வாய் என்றும் இருக்க உழவன் வாழ்வை சிறக்க உடனே மழையைத் தருக எத்தகு பணியும் எளிதில் ஏற்றம் கிடைக்கச் செய்து எளிமை வாழ்வை வாழ என்னுடன் துணையாய் வருக நேசமும் நட்பும் சூழ்ந்தே நிறையாய் வாழ்க்கை வாழ நித்திரை நாளும் கிடைத்து நிம்மதி மனதில் தருக (கவியாழி)