" பேராசைப் பெரும் நஷ்டம்" அதிகமா ஆசைப்படுவதை பேராசை என்று சொல்வார்கள். இதைப் பற்றி நிறைய நீதி கதைகளும் கட்டுரைகளும் உதாரனங்களும் உண்டு. அளவுக்கதிகமாக ஆசைபடுவதும் பொருள் சேர்த்து வைப்பதும் தவறு. இங்கு தவறான வழியில் பணம் சேர்த்த அரசியல்வாதிப் பற்றியே குறிப்பிடுகிறேன் எல்லா மதமும் இதைப்பற்றி தவறாகவே சுட்டிக்காட்டுகிறது இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் மிக சொற்பமான சிலரே.பலபேர் இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை .பணம் சேர்ப்பதிலேயே மேலும் மேலும் குறியாய் அக்கறையாய் இருப்பார்கள் இவ்வாறானவர்கள் நேர்வழியில் சேர்த்திருக்க மாட்டார்கள் தவறான வழியே தடமாக எண்ணி லஞ்சம், கலப்படம், பதுக்கல், வட்டி வசூலித்தல் , வழிப்பறிக் கொள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற தவறான வழியிலேயே சேர்த்திருப்பார்கள் இதையே தொழ...