தெய்வங்கள்

தெய்வங்கள்

புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்

முன்மண்டை வழுக்கைதனை
முகமலர்ந்தா ஏற்கிறோம்
முக சுருக்கமதையும் தவறாய்
முதிர்ச்சியாக எண்ணுகிறோம்

சொல்வளர்க்கும் கவிதையினை
சொல்லி தந்தா எழுதுகிறோம்
சொல்லவேண்டிய கருத்துக்களை
சொல்லித்தந்தே வாழுகிறோம்

கவிதை படைத்து தினமும்
கடையில் விற்பதில்லை
காசுக்காக நாளும்
கையேந்தி எழுதுவதில்லை

உள்மனதைப் பாருங்கள்
உணர்ச்சிதனை கேளுங்கள்
நல்லொழுக்கம் படித்து
நற்றமிழைக் காணுங்கள்

புன்னகை செய்யுங்கள்
புதியதாக எண்ணுங்கள்
புகழுக்காக அன்றி
புத்துணர்வாய் வாழுங்கள்



Comments

  1. ''..உள்மனதைப் பாருங்கள்
    உணர்ச்சிதனை கேளுங்கள்
    நல்லொழுக்கம் படித்து
    நற்றமிழைக் காணுங்கள்..''

    sure...eniyavaalththu....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  2. "கவிதை படைத்து தினமும்
    கடையில் விற்பதில்லை
    காசுக்காக நாளும்
    கையேந்தி எழுதுவதில்லை"

    அதி அற்புதமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வாதாடுபவரே,வலுக்கைகும் வாழ்க்கைக்கும் தொடர்புண்டா?

      Delete
  3. சான்றோர்களை சிறு பிள்ளைகள் ஐயா
    என்றழைப்பது அவர்கள் மேல் உள்ள மதிப்பு .
    கனிவுள்ள கவிதைக்குள் நாமெல்லாம் இளையோர்கள்
    என்ற உங்கள் வாதம் மிகச் சிறப்பு !
    உணர்வுள்ள எழுத்துக்குள் உயிராக நின்று
    தமிழ் வளர்ப்போம் ! உன்னதமான தங்கள்
    கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா,(கனிவுள்ள கவிதைக்குள் நாமெல்லாம் இளையோர்கள் )உண்மைதான் ஒத்துக்குறேன்.வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க

      Delete
  4. //கவிதை படைத்து தினமும்
    கடையில் விற்பதில்லை
    காசுக்காக நாளும்
    கையேந்தி எழுதுவதில்லை//

    சொல்ல வார்த்தைகளே இல்லை
    சொல்லாமல் இருப்பதும்
    சொல்லியது போல் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே .இது எனது உளுணர்வின் அழுத்தமான சிந்தனை வரிகள்

      Delete
  5. அருமையாகச் சொன்னீர்கள்! சிறப்பு. வாழ்த்துக்கள்!

    இனிதான கவிபாடி இருள் அகற்றும் சோதாரா!
    கனியான மொழியாம் எம்தமிழ் காக்கும் காவலா!
    நனிமேவும் உன்கவிதன்னால் உணர்வும் பிறக்கும்
    குனிவேதுமில்லை ஒருபோதும் நமக்கு...

    ReplyDelete
    Replies
    1. குனிவேதுமில்லை ஒருபோதும் நமக்கு...//குனிந்தாலும் விழுவதர்க்கு
      ஒன்றுமே இல்லை.நன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும்
      நன்றிங்க

      Delete
  6. எங்கே ஐயா?மனம் புகழுக்காகத்தானெ அலைகிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.புகழால் எல்லா பொருளும் நட்பும் சுற்றமும் அமையாதே நண்பரே

      Delete
  7. அருமையான சொல்லாடல்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  8. நன்றிங்க நண்பரே அவ்வாறே செய்கிறேன்.நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க

    ReplyDelete
  9. சொல்லாடல் பற்றி சொன்னமைக்கு நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  10. கவிதை மிக அருமை .
    //புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள்//

    உண்மைதான் ! மிக அருமையாய் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா. நாட்டில் நடப்பதையே சொன்னேன். மிக்க மகிழ்ச்சி

      Delete
  11. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்.மீண்டும் மீண்டும் வாங்க

      Delete
  12. கவிதைக்குள் கட்டுண்டேன்
    கார்மேகம் பட்டு நின்றேன்
    கசிந்தன அங்கே துளிகளாய்

    சுற்றி மின்னும் சர்புதீனத்து
    சமத்துவ சாகரம் மெல்ல
    உருகி உருண்டது துளிகளாய்

    பெளமார நீட்சத்தின் சமகால
    சவுதாம்பர சாட்டையின் முன்
    சல சலத்து திரண்டது துளிகளாய்

    வெது வெதுத்து கடியமிழ்ந்து
    குடிம்து முற்றத்தில் குவிய
    கொட்டியது என் கண்ணீரே!

    அன்புள்ள கவியாழி அண்ணா உங்கள் கவிதையை பாராட்டி தூய தமிழில் பாட்டு கவிதை புனைந்துள்ளேன். நல்லா இருக்கா. பிழைகள் பொறுப்பீர்.உங்களை மாதிரி எனக்கு கவிதை எழுத வாராது.

    ReplyDelete
    Replies
    1. நான் பெருமை கொள்கிறேன்.உங்களது இந்த கருத்துரையே ஒரு கவிதை தான் ,நீங்க வந்ததுக்கும் கவிதை தந்ததுக்கும் நன்றி தொடர்ந்து வாங்க.

      Delete
  13. புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள்//

    அருமை.
    நாளும் புதிகாக எண்ணுவோம்
    புத்துண்ர்வாய் வாழுவோம் .
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்.மீண்டும் மீண்டும் வாங்க

      Delete

  14. உள்ளம் சொன்னதை உரத்துக் கவிதையில் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க

      Delete

  15. // புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள் //

    நல்ல சிந்தனை! நயம்படவே சொன்னீர்கள்!

    ReplyDelete
  16. நன்றிங்க நண்பரே.நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க

    ReplyDelete
  17. புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள்

    புத்துணர்வுடன் புதுப்புனலாய்
    பூத்த வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.நீங்க கருத்துரைததில் மகிழ்ச்சியே.வாருங்கள் வாழ்த்துங்கள்

      Delete
  18. பொன்நகை செய்யாததை புன்னகை செய்யும்! கருத்து அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா .உங்களைப் பார்த்தாலும் புன்னகைத்தான் வரும்

      Delete
  19. கவிதைக்குள் கட்டுண்டேன்
    கார்மேகம் பட்டு நின்றேன்
    கசிந்தன அங்கே துளிகளாய்

    இந்தக் கவிதையை எழுதியது நான் தான் என் பெயர் கவிஞர்.நடுவேனில்.

    கவிதை நல்லாருக்கான்னு சொல்லவே இல்லையே சார். தளிர் சுரேஷ், மோகனன் மற்றும் உங்கள் தளம் பார்த்து தான் கவிதை எழுத ஆரம்பித்துள்ளேன். நீங்கள் உற்சாகப் படுத்தினால் விரைவில் கவிதைக்கென ஒரு வலைத்தளம் வாங்க இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிதை நன்று.ஆனால் நீங்கள் வரும்பெயர் சரியில்லை.உண்மையான பெயரில் எழுதுங்கள் தானகவே உங்கள் வளர்ச்சி தெரியும்.நீங்கள் தனியாக உங்கள் பெயரிலேயே வலைத்தளம் அமைக்க வாழ்த்துக்கள்

      Delete
  20. புத்துணர்வு புதிய கவிதை படைக்க மிகவும் அவசியம்.
    நல்ல சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது தொடர்ந்து வாருங்கள் கருத்தினை கூறுங்கள்

      Delete
  21. உங்கள் ஆலோசனை ஏற்றேன், கவித்துவமான புனைபெயர் நல்லா இருக்குமே என்று நினைத்தேன் இயற்பெயர் அழகர்சாமி.

    ப்ரிண்டிங் செய்து வரும் நான் கம்ப்யூட்டர் வலை இவற்றுக்கெல்லாம் ரொம்ப புது ஆளு. கடந்த 8 மாதமா தான் வலை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு வாரமா பழகி இப்ப தான் தமிழ் அடிக்க கத்துக் கொண்டிருக்கிறேன்.

    அழகர்

    ReplyDelete
    Replies
    1. நான் கடந்த நான்கு மாதங்களாய் தான் எழுதுகிறேன்.முயற்சி செய்தால் முடியும்.முயற்சியுங்கள்.அதற்குமுன் நிஜ பெயரில் எழுதுங்கள்.

      Delete
  22. Don't just live, feel alive என்று இப்போதுதான் ஒரு கட்டுரை படித்தேன். இங்கு வந்தால் கவிதையில் அதையே சொல்லி இருக்கிறீர்கள்!
    என் உள்மனத்தைப் பார்த்து உணர்ச்சிகளை கேட்டு எழுதினீர்களோ?

    கவிதை மிகவும் அருமை! வாழ்த்துகள் கவியாழி!

    ReplyDelete
    Replies
    1. அம்மா நான் அதைப் படிக்கவில்லை.இதை நேற்றே எழுதி வெளியிட்டு விட்டேன்.இருந்தாலும் உங்களது ஒப்புமைக்கு மிக்க நன்றி

      Delete
    2. தம்பீ நீயும் அது மாதிரி நல்லா எழுதிருக்கேங்காக , குறை சொல்லவில்லை.

      Delete
  23. உள்மனதைப் பாருங்கள்
    உணர்ச்சிதனை கேளுங்கள்
    நல்லொழுக்கம் படித்து
    நற்றமிழைக் காணுங்கள்

    புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள்

    வெகு சிறப்பா சொன்னீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க குருவே.நீங்க தளத்துக்கு வந்ததே பெரும்பாக்கியம் .வாங்க வாழ்த்துங்க

      Delete
  24. //முன்மண்டை வழுக்கைதனை
    முகமலர்ந்தா ஏற்கிறோம்//
    இது புதுசா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே உங்களுக்கு வழுக்கை உள்ளதா?கவலைபடவேண்டாம்

      Delete
  25. புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்
    புகழுக்காக அன்றி
    புத்துணர்வாய் வாழுங்கள்,
    nalla varigal

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க மீண்டும் வாங்க

      Delete


  26. "சொல்" எனும் வார்த்தையை பல விதங்களில் கையாண்ட விதம் அருமை

    //புன்னகை செய்யுங்கள்
    புதியதாக எண்ணுங்கள்//
    அனைவரும் இதை கடைப்பிடித்தால் போதும் சமூகம் சிறக்கும்.

    ReplyDelete
  27. நீங்க வந்ததுக்கு நன்றிங்க.கருத்தை சொன்னதுக்கும் கவிதையாய் அருமையென சொன்னதுக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more