இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு
விண்ணில் ஏவிட்ட ராக்கெட்டு
விடையொன்று சொல்லுது மெனக்கெட்டு
ரயில்வே தந்திட்ட பட்ஜெட்டு-ஏழையின்
ராத்திரி தூக்கமும் போயிட்டு
இன்னும் ஏதோ வருதாமே
இந்த ஆண்டு பட்ஜெட்டு
இருக்கிறதையும் புடுங்வாங்களோ-இனி
இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு
ஊழியனுக்கு மூணுமாசம்
உடனடி டாக்ஸ் பிடித்திட்டு
வருத்தத்தோட வருவதோ -பயந்து
வீட்டுக்கு மிட்நைட்டு
கண்ணிலே தெரிவதில்லை
கடன்காரன் ஹார்ட்பீட்டு
கண்டதெல்லாம் பேசுறானே-வட்டி
கட்டினாலும் குட்டிப் போட்டு
இத்தனையும் கட்டிபுட்டு
இல்லறத்துக்கு வருது வெட்டு
இல்லாததும் பொல்லாததும்-வரும்
இனிமே வீட்டுல திட்டு
பட்ஜெட் கவிதை சூப்பர்
ReplyDeleteசம்பளக்காரன் பொழப்பு இப்படித்தானே இருக்கும்.நேர்மையானவங்க நிச்சயம் என்னைபோல வருந்தியாகணும் நண்பரே. நீங்களுந்தான்
Deleteவருமான வரி கட்டியாச்சா ?
ReplyDeleteஇந்தமாதம் சரிபாதி சம்பளம் வருமான வரியாய் போச்சு இன்னும்கூட கட்டனும்.அய்யா நீங்க பரவாயில்லை எங்க பொழப்பு நாறுது
Deleteஇருக்கிறதையும் புடுங்வாங்களோ-இனி
ReplyDeleteஇன்கம்டாக்ஸ் நிறைய போட்டு
இன்னல் தொடரும் ....
மார்ச் மாதம் முடிந்தாலும் அப்புறம் இருக்குது வேட்டு.பசங்க லீவு விட்டுநன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கு
Deleteஇன்னலையும் கவிதையாக்கிய விதம் என்ன சொல்ல.....
ReplyDeleteநன்றிங்கம்மா.வந்ததுக்கும் கருத்து தந்தக்கும் நன்றி.
Deleteஇப்படி கவிதையாய்ப் பாடி சலித்துக்கொள்ள மட்டும் தானே நம்மால் முடிகிறது... சார் கவிதை நல்லாயிருக்கு வலிகள் வேதனையாயிருக்கு...
ReplyDeleteஉண்மைதாங்கம்மா .நியாமானவங்கதான் கஷ்டபடனும் .நானும் கஷ்டப்படுகிறேன் குறைந்தது எண்பதாயிரம் வருஷம் கட்டவேண்டியுள்ளது என்ன செய்ய?
Deleteஅடடா... இப்படிப் பாடிப்புட்டீங்களே.. நீங்களும் ரொம்ப அடிபட்டு...:)))
ReplyDeleteஅசத்தல். உங்கள் கவியை ரசித்தேன். சிரித்தேன். வாழ்த்துகிறேன்!
சம்பளக்காரன் பொழப்பு சாந்தி சிரிக்குதுன்னு சொல்லுவாங்க .நீங்களும் அதைதான் செய்தீங்க.நன்றிங்க
Delete''..இல்லாததும் பொல்லாததும்-வரும்
ReplyDeleteஇனிமே வீட்டுல திட்டு..''
nanru.
Vetha.Elangathilakam
ஆமாங்க உண்மைதான்.சம்பளமெல்லாம் எங்கபோயி கொட்டுரீங்கன்னுனு பிரச்சனைவரும்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமுதலில் உங்களது பேரை மாற்றிவிட்டு வரவும்.இல்லையெனில் எனது மெயிலில் kandasan@gmail.com க்கு தனி மையிலில் அனுப்பவும்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅழகர்சாமி என்ற பெயரே அற்புதம் அப்படியே பதிவு செய்யுங்கள்
Deleteகவியாழிஅண்ணா, கடைசியில் என் கவிதை பிடிக்கவில்லை என்று சொல்லிதானே எடுத்து விட்டீர்கள். என்ன குறை என்று எனக்கு அறியத்தந்தால் நான் அடுத்த முறை திருத்திக் கொள்ள ஏதுவாகுமே. நேற்று நல்லாருக்குன்னு சொன்னீர்களே ? கவிதையில் பிழை இல்லையெனில் தயை கூர்ந்து எனக்கு காரணத்தை சொல்லுங்கள்.
Deleteஉங்களை போன்ற கவிதைமனம் படைத்தவர்களே ஒதுக்கினால் எப்படி ?
பதிவர் கணக்கில் வரவில்லை என்ற குறை உங்களுக்கு இருக்கிறது போல. பதிவு தொடங்கலாம் என்றால் எப்படி என்று தெரியவில்லை. தமிழ்மனத்தில் கருவிப்பட்டை அது இது என்கிறார்களே தவிர எப்படி பதிவு கணக்கு தொடங்கவேண்டும் என்ற விபரமில்லை. இது வெப்சைட் போன்றது அதற்கு வருடத்திற்கு பணம் கட்டி சர்வரில் 2mp space எடுக்கனும் என்கிறார் என் நண்பர்.
ஸ்கிரீன் பிரிண்டிங் வேலை ரொம்ப பிஸியாக வந்திருப்பதால் ,விபரம் தெரிந்தவர்களை நேரில் சென்று பார்த்து அறியவும் முடியவில்லை. உதவ மனமிருந்தால் எனக்கு உதவுங்களேன் ப்ளீஸ்.
கஷ்டப்பட்டு சம்பாதித்து
ReplyDeleteஇன்கம்டாக்ஸ் கட்டிவிட்டதைப்
புட்டு புட்டு வைத்துவிட்டு
கட்டிவிட்டீர் கவியாழி ஐயா.
அருமை.
உங்க கவிதையும் அருமை. நேர்மைக்கு கஷ்டம் வரத்தானே செய்யும்.இதுவும் சத்தியசோதனையா?
Deleteஇன்கம்டாக்ஸ் கவிதை இனித்தது! டாக்ஸ் வரும் போது கசக்கும்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருசமெல்லாம் பிடிக்கிறாங்க .இருந்தாலும் கடைசி மூணுமாசம் அதிகமா பிடிக்கிறாங்க
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteதருமதுறை,
Deleteஎதுக்கோசரம் என் கமெண்ட்டிங்-ஐ அழித்தீர் செப்பிடுக...
சூப்பர், அடுக்குமொழியில் கலக்குறிங்க சார். மிகவும் ரசித்தேன், சரியான சமயத்தில் சரியான கவிதை! டைமிங்.......சூப்பர்.
ReplyDeleteநன்றிங்க தம்பி தொடர்ந்து வாங்க
Deleteபட்ஜெட் வரவேற்பா?!அருமை அய்யா
ReplyDeleteநன்றிங்க குட்டன்.வரவேற்ப்புக்குமுன் வேதனையை சொன்னேன்
Deleteஇந்த பட்ஜெட் எப்படி இருக்குமோ என்னமோ ?
Deleteபட்ஜெட் பற்றி கவலை வேண்டாம் நண்பா அடுத்த வருடம் எலெக்சன் இருப்பதால் எல்லாம் நல்ல பட்ஜெட்டா தான் இருக்கும்
Deleteபட்ஜெட்டிற்கு வரவேற்பு கொடுக்கிறீர்கள் போல் தெரிகிறது.
ReplyDeleteஅருமையான கவிதை.
This comment has been removed by a blog administrator.
Deleteபயம்தான்.நன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Deleteபிச்சை எடுக்குதாம் பெருமாள் புடுங்கித் தின்னுதாம் அனுமார்
ReplyDeleteஎன்ற கதையாய் போகுது உழைத்தும் ஏதும் மிஞ்சாத உழைப்பாளி
வர்க்கத்தின் சோக நிலைதன்னை மிக அருமையாகச் சொல்லிச்
சென்றுள்ளீர்கள் ஐயா!... வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
உண்மைதான் நட்பே.அரசாங்க பதவியில் உள்ளவர்கள் அதிக வரி கட்டியே ஆகவேண்டும்.வெளியிலும் விற்பனைவரி கலால் வரி போன்றவற்றோடு சேர்த்தல் பாதிக்குபாதி வரியாக செலுத்த வேண்டும்.அதனால் நேர்மையானவர்களின் வாழ்க்கை ஓடம் கஷ்ட காலம் தான் என்ன செய்ய.
Deleteநியாயமா வரி கட்டுபவர்கள் பாடு என்றுமே
ReplyDeleteதிண்டாட்டம் தான்.
உண்மைதான்.அநியாயமாய் சம்பாதிப்பவன் கவலைபடுவதில்லை
Deleteட்டு போட்டு இட்ட கவிதையின் சாரம் இடித்துவிட்டு போனது என் மனதை
ReplyDeleteஆம் நட்பே .இன்னும்கூட நல்லா எழுதி இருக்கலாமேன்னு தோணுது.
Deleteகுட் பை மிஸ்டர் கவியாழி இன்றிலிருந்து உங்கள் தளத்திற்கு நான் வரமாட்டேன் என்று அறிதியிட்டு கூறிக்கொள்ள விழைகிறேன். தாங்கள் என் பொன்னான கருத்துக்களை அழித்து வருவதால், வீனாக எதற்கு என் நேரத்தை வீனாக்க வேண்டுமென்ற என்னத்திலும் உங்களுக்கு எதுக்கு அனாவசியாமாக அழிக்கும் வேலையை வைக்க வேண்டும் என்ற என்னத்திலும் இந்த முடிவு. உங்கள் கருத்தை நீங்கள் பதிகிறீர்கள் ,அதில் என் விமர்சனத்தை வெளியிட நீங்கள் விரும்பவில்லை அது உங்கள் உரிமை எனவே நான் விலகிக்கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி வனக்கம்.
திருவாடானை ஆற்றலரசு
ஒவ்வொருமுறையும் வெவ்வேறு பெயர் சொல்லும் அன்பரேஇவ்வளவு நல்ல விமர்சகர் ஏன் மறைந்திருந்து கருத்து சொல்ல வேண்டும் ?
Deleteசார் நல்லா பாருங்க இதுக்கு முன்னாடி நான் கையெழுத்து போடவே இல்லீங்க.... அனானி ஆப்சன் யூஸ் பன்றவங்கள் எல்லாம் மறைந்திருப்பவர்களா ? கோகுலத்தில் சீதையில் வருகிற ஐ.சி. மோகன் அல்ல நான். தங்களை துன்பப்படுத்த நான் வரவில்லை. என் கருத்து உங்களுக்கு பிடிக்காததால் விலகிக் கொள்கிறேன். நல்ல விமர்சனத்தை தாங்க மாட்டாத உங்களை தொந்தரவு செய்வது தவறு தானே. எல்லா வசதியும் படைத்தவர்கள் கூகிளில் சொந்த கணக்கு எல்லாம் வைத்திருக்கிரார்கள் , நாங்கள் பரவுசிங் சென்டரை அண்டி இருக்கும் அனானிகள்.
Deleteஅப்படி அனானி என்றால் இளக்காரம் என்றால் தயைசெய்து அந்த வாயிலை அடைத்துவிடுங்கள். என் போன்ற எழைகள் வந்து வசவு வாங்காமலாவது இருப்பார்கள் அல்லவா. வாயிலைத் திறந்து வைத்து வந்ததும் வாயிலே அடிப்பது முறையா ?
என்றும் அன்புடன்
திருவாடானை ஆற்றலரசு.
இந்தக் கருத்துக்கு மறுப்போ அழிப்போ தங்களிடமிருந்து வராததிற்கு நன்றி.
Deleteநான் இத்துடன் உங்கள் தளத்தில் கருத்திடுவதை முன் சொன்னபடி நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் தொடர்ந்து உங்க கவிதையைப் படிப்பேன் அது மட்டும் என்னால் நிறுத்தமுடியாது.
திருவாடானை ஆற்றலரசு
இன்னும் ஏதோ வருதாமே
ReplyDeleteஇந்த ஆண்டு பட்ஜெட்டு
இருக்கிறதையும் புடுங்வாங்களோ-இனி
இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு//
வரும் கஷ்டங்களை அழகான கவிதை ஆக்கிவிட்டீர்கள்.
பட்ஜெட் வந்துவிட்டது.ஏமாற்றம் தான் என்னைபோல அரசு ஊழியனுக்கு சலுகை இல்லையே
Delete