தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதனாக வாழ்க்கை முடியுமே

விலைவாசித் தாறுமாறா ஏறுது
விடிந்தாலே கடனெல்லாம் அழைக்குது
தரவேண்டிய வட்டியும் சேர்த்ததும் 
தலைமேல முடியெல்லாம் கொட்டுது

பணக்காரன் வசதியும் பெருகுது
பணத்தாலே எல்லாமே முடியுது
மருந்தாலே வாழ்கையை ஒட்டியும்
மளமளன்னு பணமோ சேருது

விலைவாசி உயர்வை எண்ணியே
விவசாயி மனசும் எரியுது
நிலமெல்லாம் தண்ணீர் குறைச்சலால்
நெடுந்துயர்ந்த வீடாய் மாறுது

பிழையாக படிக்க மறந்த
பிள்ளையின் மனசும் தவிக்குது
நெடுநாட்கள் படிப்பை முடித்தும்
நிம்மதியாக வேலை மறுக்குது

அரசாங்கம் கடமை தவறியே
அநியாயம் வளர  தொடங்குது
அதனாலே பலபேரின் வாழ்க்கை
அடங்காத செயலைத் தூண்டுது

பலபேர்கள் மடிந்து சாவதற்கு
பணம் ஏனோ தகுதியாகுது
மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே
மனிதனாக வாழ்க்கை முடியுமே



(கவியாழி)

Comments

  1. காசேதான் கடவுளென்று ஆனதனால் கடவுளுக்கும் இங்கு
    மதிப்புப் போய் ரொம்ப நாளாச்சு சகோதரா இனியும் மாறுவார்கள்
    என்ற நம்பிக்கை கிடையாது !சிறப்பான வரிகள் மேலும் மேலும்
    தங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் .கவிதைப் போட்டியில்
    பங்குபெறவில்லையா ?...
    வாருங்கள் சகோதரா இதோ என்னுடைய கவிதைகள்
    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html

    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    அருமையான வரிகள் இரசித்துன் ஐயா. பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உண்மையை பாங்காய் உரைத்திட்டீர். நண்பரே!

    ReplyDelete
  4. "பலபேர்கள் மடிந்து சாவதற்கு
    பணம் ஏனோ தகுதியாகுது
    மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே
    மனிதனாக வாழ்க்கை முடியுமே" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  5. பணமின்றி வாழ்வில்லை! ஆனால் பணமே வாழ்வில்லை!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்