சுற்றமும் நட்பும் உறவாய்.....
விதவை மணம் மறுத்து வீதியிலே செல்லும்போது கதைகள் பல சொலலி காயப் படுத்வோர் பலராம் உறவும் அறுந்து வாழ்க்கை உணர்வும் மடிந்து சிலரோ துறவம் இருந்து வந்தால் துன்பம் அங்கே மிகுமாம் வாழ்வும் இன்பம் தொலைத்தார் வறுமை கொண்டே வாழ்வோர் ஊரும் உறவும் பிரிந்து உலகம் பலதும் சென்றும் காணும் மக்கள் எங்கும் கன்னித் தமிழைப் போற்றி நாளும் இருந்து வருவோர் நாவில் இதுபோல் வேண்டாம் சுற்றமும் நட்பும் உறவாய் சேர்ந்து வாழ்ந்து வருவீர் குற்றம் குறைகள் மறந்து குலமே தமிழாய் வாழ்வீர் (கவியாழி)