தெய்வங்கள்

தெய்வங்கள்

சுற்றமும் நட்பும் உறவாய்.....

விதவை மணம் மறுத்து
வீதியிலே செல்லும்போது
கதைகள் பல சொலலி
காயப் படுத்வோர் பலராம்

உறவும் அறுந்து  வாழ்க்கை
உணர்வும் மடிந்து சிலரோ
துறவம் இருந்து வந்தால்
துன்பம் அங்கே மிகுமாம்

வாழ்வும் இன்பம் தொலைத்தார்
வறுமை கொண்டே வாழ்வோர்
ஊரும் உறவும் பிரிந்து
உலகம் பலதும் சென்றும்

காணும் மக்கள் எங்கும்
கன்னித் தமிழைப் போற்றி
நாளும் இருந்து வருவோர்
நாவில் இதுபோல் வேண்டாம்

சுற்றமும் நட்பும் உறவாய்
சேர்ந்து வாழ்ந்து வருவீர்
குற்றம் குறைகள் மறந்து
குலமே தமிழாய் வாழ்வீர்


(கவியாழி)



Comments

  1. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

    ReplyDelete
  2. மீண்டும் முழு வீச்சுடன் எழுத வேண்டும் பதிவர் சந்திப்பில் தங்களை எதிர்பார்த்தேன். என்ன ஆயிற்று.

    ReplyDelete
    Replies
    1. சென்னைவர தொடர்வண்டி முன்பதிவு உறுதியாகவில்லை .

      Delete
  3. கவிதை மூலம் அறிமுகமா? - மிக
    .........கனகச் சிதமாய்த் தரும்கவியே!
    கவியாழி யாரைக் காணலையே - எனக்
    ........கணித்தமிழ் உலகம் கேட்டதையா!
    ------------------------------------------------
    எழில்நிலவர்பணி உலகறியும் - அதை
    .......எடுத்துச் சொன்ன விதம்அழகு!
    அவர்தம் நூல்களின் பட்டியலை -இதில்
    ......அடுக்கி இணைத்தால் பயன்படுமே?

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. இது அடுத்த பதிவுக்காக எழுதியது.
      மின் சிக்கலால் சேமித்தபின் இட்டபோது,
      இங்கே வந்து சேர்ந்திருக்கிறது.

      Delete
    2. ஆமாங்கையா .ஆர்வத்தில் இப்படி ஆகிவிட்டது.உங்களின் ஆதங்கம் புரிகிறது

      Delete
  4. சுற்றமும் நட்பும் உறவாய்
    சேர்ந்து வாழ்ந்து வருவீர்
    குற்றம் குறைகள் மறந்து
    குலமே தமிழாய் வாழ்வீர்//

    உண்மையே! சிறப்பான வரிகள்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்