தெய்வங்கள்

தெய்வங்கள்

மூத்தப் பதிவர்.புலவர்.இராமானுசம்





(அய்யா புலவர் இராமானுசம்)



வயதில் மூத்த பதிவர்
வளமைக் கொண்டகவிஞர்
இளமை பருவம் முன்பிருந்தே
இனிமைத் தமிழைப் படித்தறிந்தே

தெளிந்த நடையில் கவிபடைக்கும்
தேர்ந்த கவிதைப் புலவராவார்
வலையில் வருவார் போவோரை
வயதைப் பார்த்துப் பேசாமல்

உறவாய் வலையைப் போற்றியே
உடனே படித்துப் பார்த்துமே
புரிந்தால் மட்டும் கருத்துகளை
பதியத் தயங்கிட மாட்டார்

உதவி என்று கேட்போரை
உடனே அழைத்துப் பேசிடுவார்
நிலைமை நன்கே புரிந்தவுடன்
நிறைய உதவிகள் செய்திடுவார்

துணையை இழந்தும் மறவாமல்
தினமும் எண்ணிக் கலங்கிடுவார்
மகளைப் பெற்ற தாயாக
மகிழ்ந்தும் இன்றும் வாழுகின்றார்

என்னையும் மதித்துப் பாங்குடனே
என்றும் அறிவுரை சொல்லிடுவார்
அன்னை போன்ற என்மகளை
அன்பாய் பேத்தி என்றிடுவார்

இவரைப் போலப் பதிவுலகில்
எல்லாப் பதிவரும் இருப்பீரே
எழிலாய் தமிழைப் போற்றியே
இணைந்தே மகிழ்ந்தே வருவீரே


(கவியாழி)


Comments

  1. வணக்கம்
    ஐயா

    புலவர் ஐயாவை பற்றிய கவிதை நன்றாக உள்ளது...அவரின் வயதுதான் கடந்துள்ளது தமிழ் மேல் உள்ள காதல் இளமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரா !

    அன்பைப் பொழிவதில் ஐயாவிற்கு இணை இந்த வலையுலகில் எவரும்
    இல்லை என்றே உணரத் தோன்றும் அளவிற்கு அன்பு நிறைந்தவர் தான்
    எங்கள் புலவர் ஐயா ! சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  3. அன்பில் அறிவில் மூத்தவர் அவருக்கு தகுந்த பாராட்டுரை வழங்கிய தங்களுக்கு எனது வாழ்த்தக்கள். ஐயாவிற்கு எனது வணக்கம்.

    ReplyDelete

  4. வணக்கம்!

    புலவரைப் போற்றிப் புனைந்த கவிதை
    உளமதை ஆளும் ஒளிர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கையா

      Delete
  5. புலவர் அய்யாவைப் பற்றி அழகாய் கவிதை வடித்துள்ளீர்கள் !
    மதுரை பதிவர் சந்திப்புக்கு அய்யாவுடன் தாங்களும் வருவீர்கள் மிகவும் எதிர்பார்த்தோம் !
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. முயற்சித்தோம் முடியவில்லை நண்பரே.

      Delete
  6. புலவர் ஐயா பற்றி மிக சிறப்பான கவிதை ஒன்றை படைத்துள்ளீர்கள். அனைத்தும் உண்மை . அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  7. 2010 இலிருந்து புலவர் ஐயாவின் பதிவுகளைப் படிக்கிறேன்.
    தமிழறிவும் தமிழ் பண்பாடும் அவரது அணிகலன் - அந்த
    அறிஞரின் பதிவில் படித்த மாணவன் நானென்பேன்!
    புலவர் ஐயா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  8. புலவர் ஐயாவினைப் பற்றிய கவிதை சிறப்பு.

    இரண்டு முறை அவரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. அவரை அறிந்தவர்களுக்குத்தான்
    அவரின் அருமையும் பெருந்தன்மையும் புரியும்
    அருமையாகப் பதிவு செய்துள்ளமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  10. இவரைப் போலப் பதிவுலகில்
    எல்லாப் பதிவரும் இருப்பீரே
    எழிலாய் தமிழைப் போற்றியே
    இணைந்தே மகிழ்ந்தே வருவீரே...nanru..nanru.....
    Vetha.Langathilakam

    ReplyDelete
  11. புலவர் ஐயாவைப்பற்றிய வரிகள் அருமை! அழகாய் சொல்லி உள்ளீர்கள்!

    ReplyDelete
  12. புலவர் ஐயாவைப்பற்றிய பாவரிகள் அருமை!

    ReplyDelete
  13. உண்மை கூறும் கவி வரிகள். புலவர் ஐயா பற்றி அழகைக் கவி தந்துள்ளீர்கள். நானும் இணைந்தே அவரை வாழ்த்துகின்றோம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  14. ஐயாவைப் பற்றிய தங்களின் வரிகள் அனைத்தும் உண்மை. அவரைப் போற்றுவதில் தங்களுடன் நாங்களும் இணைகிறோம்.

    ReplyDelete
  15. இப்போதும் அய்யா இவ்வளவு எழுதுகின்றார்களே! முப்பது ஆண்டின்முன் எப்படி இருந்திருப்பார்? தமிழகத்தைப் புரட்டிப்போட் ஜாக்டீ-போராட்டத்தின் போது அய்யாவை நான் அறிவேன். (அபபோதே நான் தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலர், அய்யா மாநிலத் தலைவர்!) தன்பணிகளை மேம்படுத்திக் கொண்டுவரும் அய்யா தமிழாசிரியர்களுக்கெல்லாம் முன்னோடி! அய்யாவைப் பற்றிய தங்கள் கவிதை அருமை அ்ய்யா!. விரைவில் தங்களையெல்லாம் சந்திக்க சென்னை வருவேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்களைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்