தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா

நண்பர்களுக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப்  பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னையிலிருந்து காலை ஆறு பத்துக்குப்  எனது மகிழுந்தில்  புறப்பட்டு பகல் பன்னிரண்டு ஐம்பதுக்கு சேலம் சேர்ந்தேன்.
அங்கு எனக்காக காத்திருந்த நண்பர்களுடன் மூன்று மகிழுந்தில்  மொத்தம் பதினொருபேர் இன்ப உலாவாக  கோவை வழியாக பொள்ளாச்சி சென்றடைதோம்.இரவு நேரத்தில் மலையேற அனுமதி இல்லாததால் .இரவு பொள்ளாச்சியிலேயே தங்கி விட்டோம்.
அடுத்தநாள் காலை பதினோரு
மணிக்கு மூன்று மகிழுந்துடன் இன்னொன்றும் சேர்ந்து மொத்தம் நாலுவதுமாய் சேர்ந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அங்கு தின்பண்டங்கள் உணவு சமைக்க வேண்டிய பொருட்களுடன் மற்றும் சில இத்யாதிகளுடன் எல்லோரும் புறப்பட்டு சென்றோம்.வழியில் குரங்கு வீழ்ச்சி (monkey falls)செல்லாமென நினைத்து ஆழியாறு அணையைக் கடந்து சென்றால் அதிர்ச்சி?காரணம் தண்ணீர் இன்றி பரிதாபமாக குரங்குகளே வரிசையாய் பரிதாபமாய்இருந்தது. நாங்கள் எடுத்துச் சென்ற குடிநீர் பாட்டில்களிருந்து ஒன்றிரண்டை பகிர்ந்தளித்தோம்.

எமது குழுவிலிருந்த அத்தனை நண்பர்களின் ஒருமித்த உற்சாகத்துடன் மலையேறி வால்பாறையில் மதிய உணவருந்திவிட்டு மேலும் மலையேறத் தொடங்கி உற்சாகம் குறையாமல் தொடர்ந்து சென்றோம்.அங்கு எங்களுக்காக காத்திருந்த நண்பரின் வீட்டில் தங்கினோம்.
















இரவு ஏழு மணிக்கே  இரவாகிவிட்டதால் வெளியில் செல்ல அனுமதியில்லை.அங்கு வரும் ஒரே ஒரு பேருந்தும் ஆறு மணிக்கே சென்றிருந்தது.அங்கிருந்த நண்பரோ இனி வெளியில் நிற்கக் கூடாது  என்றும் ,புலி,சிறுத்தை,காட்டெருமை,யானை போன்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதையும் எச்சரிக்கை செய்தார்.

நான் மட்டுமல்ல என்னோடு பயணித்த பெரும்பாலான நண்பர்கள் பீதியில் பயந்தனர். எப்படியோ பயத்தோடும்,பயணக் களைப்போடும் இரவில் தூங்கினோம்.சில நண்பர்கள் மட்டும் கூட்டம் சேர்ந்தால் கொண்டாட்டம்தான் என்று அதிகாலைவரை கச்சேரிதான் என்று காலை எழுந்தவுடன் கேள்விப் பட்டு நொந்துபோனேன்.இருந்தாலும் சுகமான பயணம் தொடர்ந்த உறக்கமென காலை எழுந்ததும் உற்சாகமாய்  மேலும் பயணித்து சின்னக்கள்ளார் அணையை பார்க்கச் சென்றோம்.





அங்கிருந்த காவலாளி,அய்யா இங்கு தரையில் எங்கும் இறங்க வேண்டாம் ராஜநாகங்கள் நடமாட்டம் அதிகமென மேலும் பீதியை கிளப்பினார்.அருகிலிருந்த நண்பர் தைரியமாய் கீழிறங்கினார்,சிறிது தூரம் சென்றவர் பதறியடித்துக் கொண்டு அலறியபடி வந்தார்.தான் அங்கு ராஜ நாகத்தைப் பார்த்ததாகவும்  பார்த்ததும் பயந்தோடி வந்ததாகவும் சொல்ல மகிழுந்தின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு அந்த இடம் சென்றதும் அதிர்ச்சியடைந்தோம்.காரணம் அங்கும் அப்போதுதான் ராஜநாகம் தோலுரித்து  போட்டுச் சென்றதும் தப்பித்தோம்  பிழைத்தோமென கிளம்பினோம்.Image result for ராஜநாகம் பாம்பு


கவியாழி

Comments

  1. நல்லதொரு சுற்றுலா.... தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  2. சுவாரஸ்யம்.தொடர்கிறோம்.வாழ்த்ததுக்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  3. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது சரிதான் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரியாதா?வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  4. ஆகா
    அருமையான பயணம்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  5. பயணமும் பதிவுகளும் தொடரட்டும்...

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  7. நேரில் பார்த்த மாதிரி இருந்தது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.புலி, சிறுத்தைகள் அங்கு அதிகம்.பார்த்தேன் ஆனால் படமெடுக்க இயலவில்லை

      Delete
  8. வால் பாறையில் பயணித்தோம்
    தங்களது தமிழ் தேரில் ஏறி பவனி வந்தோம்.
    பயணக் கட்டுரை அழகு! அருமை! வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  9. அழகான படங்களுடன் பயணம் அனுபவம் அருமை. கடைசி ராஜநாகத்தை இவ்வளவு பக்கமாய் எடுத்தது யார்? நெஞ்ச்சம் நடுங்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,இனி தொடரும்

      Delete
  10. (1)நீண்ட நாளைக்குப் பிறகு வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இனி, தொடர்ந்து எழுதுங்கள் - உரைநடையில்! (2) அந்த ராஜனாகத்தின் படம் நன்றாக இருக்கிறது. (3) பாம்பு உரித்த தோலைக் கொண்டுவந்தீர்களா? (5) indiblogger டி ஷர்ட்டு எப்படிக் கிடைத்தது?

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு வந்தால் காண்பிக்கிறேன்.வெகு தூரத்திலிருந்து வரும் தங்களின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது

      Delete
  11. ஃபேஸ்புக்கிலிருந்து மீண்டு கொஞ்சம் வலைப்பக்கமும் வந்தமைக்கு நன்றி. படம் எடுக்கும் நாஜநாகத்தை அழகாக படம் எடுத்த போட்டோகிராபருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அழைப்புக்கு நன்றி.இனியும் தொடர முயற்சிக்கிறேன்

      Delete
  12. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. தங்களது ஈமெயில் முகவரியை சொல்லவும்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்