தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டுடில்.......9

பருவம் பதினெட்டில் ........9
-----------------------------------------

பூவிதழ் பற்றிட துடிக்கும்
புன்னகை மறந்திட்டு பருகும்
மேனியில் கைத்தடம் பதித்தால்
மேகலை கிங்கிணி யாகும்


தேயிலைத் தோட்டத்தின் அருகில்
தேனடை பார்த்திட்ட நொடியில்
மாவிலைத் தோரணம் மறந்தே
மனமிடத் தோன்றிடும் அழகே


பாமகள் வரிகள் அழகாய்
படித்திட நிதமும் பிடிக்கும்
பூமகள் அழகை நினைத்தே
பூத்திடும் கைகளும் சிலிர்த்தே

யாரிவள் தேரோ சிலையோ
யாசகம் துறந்த தமிழோ
போரிடும் நிலையில் வீரம்
பொசுங்கி உரமாய் போகும்.......10கவியாழி.கண்ணதாசன் 


Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்