தெய்வங்கள்

தெய்வங்கள்

குழுவாய் உழைப்போம் நிலத்தில்....

 குழுவாய் உழைப்போம் நிலத்தில் .....
-------------------------------------------------------

கேள்விகள் ஆயிரம் கேட்கலாம்
கேட்டதை மாற்றிக் கூறலாம்
வேள்விகள் நிறைய செய்யலாம்-மன
வேதனை தீர்க்க முடியுமா

போலிகள் வாழ்க்கையை மாற்றலாம்
போதையில் வாழ்க்கையை மறக்கலாம்
வேலியே பயிரை மேய்வதால்- கொடும்
வேதனை எங்கே சொல்வது

காலையில் எழுந்ததும் பூசைகள்
கடவுளைப் பார்கவும் ஆசைகள்
வேலைக்கு மாத்திரை போடாமல்-வயிற்றுக்கு
விருப்பமாய் உணவு செல்லுமா

ஆதிக்கத் திமிரில் வாழ்பவன்
ஆசையாய் உறங்க முடியுமா
போதிக்க மறுத்த தலைவனை -இன்று
புறம்பான பேச முடியுமா

நீதிக்கதைகள் யாவையும் இன்றும்
நிலையாய் நிற்கக் காரணம்
ஆதித் தமிழனின்  பெருமையே-உணர்ந்து
ஆணவம் மறந்து வாழுவோம்

தேடிப் பிழைப்பதை மறந்து
தோழமை உறவும் மகிழ்ந்து
கூடி வாழ்வோம் ஊரில்-விரும்பி
குழுவாய் உழைப்போம் நிலத்தில்...

கவியாழி.கண்ணதாசன்

Comments

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்