தெய்வங்கள்

தெய்வங்கள்

60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....

இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும்
இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும்
புதிதாய் தொடங்கும் பொழுதும்  கழிய-பறவையாய்
புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய்

பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும்
பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம்
பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து 
பாசம்தேடி மகிவாய் பறந்து  போவேன்

வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை
வாழ்வில் நட்ப்பை  வறுமையாய் விட்டதில்லை
தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை
தவிக்கவிட்டு தனியாய்  நடந்தே சென்றதில்லை 

வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை
வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை
ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும்
ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை

நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை
நல்ல நேரம் பார்த்து  செய்ததில்லை
கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய்
கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன்

இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை
இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை
தன்னலம்  கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல்
தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை



---கவியாழி---
   சென்னை
  11.07.2020



 

Comments

  1. எண்ணத்திலும் எழுத்திலும் அதீத முதிர்ச்சி...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  2. அருமை...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்