தெய்வங்கள்

தெய்வங்கள்

சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு

அருகில் வந்ததும் முகம் மலரும்
ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே
என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே
எற இறங்க மனதை அளந்து பார்க்கும் 

புரியும் வரையில் கேள்வி கேட்டு
புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும்
மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே
மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும்

உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம்
உள்ளம்  வரையில் ஊர்ந்து சென்று
தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே
தைரியமான  நல்ல வார்தைகள்  சொல்லும்

மனதில் ஓடும் சிந்தனை தனக்கு 
மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும்
தனமும் உடலும்  தவிப்பதை கண்டு -கண்கள்
கனமே உணர்திக் கைகளைப் பற்றி

தினமே பழகும் நட்பாய் இருந்தும்
தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று
பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே
பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி

முகத்தைப்   பார்த்து அகத்திதில் புகுந்து
முடிவில் உண்மை நிலையைக் காணும்
கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை
கடந்தும் நட்பே  என்றும் வெல்லும்


கவியாழி.......
சென்னை

Comments

  1. நட்பின் சிறப்பு அருமை...

    ReplyDelete
  2. நல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்