தெய்வங்கள்

தெய்வங்கள்

விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரை

தமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை.

ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க  உழைக்கத்திறனிருந்தும்  ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது.

அலுவலகம் செல்வோர் முதல்  அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய  நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர்.

அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி
எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலையில் நொந்தனர்

கொரனா என்னும் தொற்று நோய் கூட்டமாய் வந்து விரட்டுமேன  எந்த மதமும் சொல்லவில்லை யாருமே இதை பற்றி அறிந்திருக்கவில்லை. மருத்துவமனைகள் மட்டுமே முழுநேர திறந்திருக்க மக்கள் பலரும் வீட்டில் முடங்கியிருக்க  எல்லா சாலையும் மூடி எங்குமே செல்லாமல் அவசர ஊர்திகள் மட்டும் ஆங்காங்கே பறந்து சென்று உயிருக்கு துடிப்பவர்,உடலாக கிடப்பவர் என ஊரெங்கும் மரணபயம் .

இருப்பவன் கொடுக்க மனமிருந்தும் எட்டி நின்று கொடுத்தாலும்  ஏழைக்கும் சரி இருப்பவுக்கும் நோய்த்தொற்று வருமோ என்று எண்ணி  வெறுப்பவன்  அதிகம் வேடிகைப்பார்த்தே செல்லும் நிலை .இலவச மளிகைப்பொருள்கள் உணவு பொட்டலங்கள் எல்லோருக்கும் கிடைக்காவிட்டாலும் எளியோருக்கு கிடைத்தது.

பிணத்தை தூக்க ஆளில்லை பிள்ளைகள் அருகில் செல்ல அனுமதியில்லை.  உழைப்பாளி,முதலாளி ,காவலர்கள்  மட்டுமல்ல
மருத்துவரும் செவிலியரும் மரணிக்க அவசரமில்லா வயதினரும் மாண்டனர்.சடங்குகள் ,தோரணம் ஆட்டம் பாட்டமின்றி அனைவரும் சமமென அவசரமாய் ஆழத்தில் புதைத்தனர்.

இன்னும் நிலை மாறவில்லை ஏழை வாழ வழியுமில்லை. எல்லோலோர் மனதிலும் ஏற்பட்ட பீதி அடங்கவில்லை.என்று முடியுமோ எல்லோர் நிலையும் மாறுமோ என்று சொல்வார் யாருமில்லை இன்னும் நிறையபேருக்கு சோத்துக்கே வழியில்லை. இதுவரைப் போதும் இத்தோடு நிறுத்திக்கொள்
இயல்பு வாழ்க்கை திரும்பிவந்து எல்லோர் மனதும் மகிழ்ச்சிக்கொள்ள இன்றே ஓடிவிடு கொரானாவே


கவியாழி.கண்ணதாசன்
சென்னை.
05.08.2020

Comments

  1. கண்ணதாசன் சார்! எப்படி இருக்கிறீர்கள் நலம்தானே! நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுகண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. Replies
    1. மனம் போல மகிழ்ச்சியாய் வாழ்வோம்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்