தெய்வங்கள்

தெய்வங்கள்

அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !


பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை
பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை
மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க
மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ?

உச்சமடைந்து உயிரைபோக்க கீழே
உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ
அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு
அதுவும் கருகி உரமாய்ப்போகும்

மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு
மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம்
துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில்
தொங்கிக் கொண்டே விழுந்தே காயும்

இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து
இலைகள் போல மனிதன் வாழ்வும்
சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு
சோகமின்றி நல் நினைவாய் முடியும்

.........கவியாழி.கண்ணதாசன்......
          சென்னை.27.08.2020

Comments

  1. Replies
    1. மனித வாழ்க்கையும் இதுபோலத்தானே நண்பரே

      Delete
  2. கவிதை நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  3. Replies
    1. வருகைக்கு நன்றிகள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்