தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கையான நட்பு மாறாது

இயற்கையின் கொடையாய் மழை
எப்பொழுதோ புயலாக பொழிந்தாலும்
இனிமையாய் மனதில் மகிழும்
எங்கெங்கும் பசுமை சிரிக்கும்

செயற்கையாய் மழையே வந்தால்
சிலருக்கு மட்டுமே தெரியுமாம்
செழுமை மறந்து வருத்தமாய்
சினமாய் பசுமை மறையுமாம்

பயிற்சியால் மகிழ்ச்சியை நாளும்
பகிர்ந்திடும் முயற்சியை யாரும்
பணத்தினால் உணர்த்திட முடியாது
பாசமும் அதனால் வளராது

முன்னாள் பள்ளி நிழ்வுகள்
முதுமையிலும் தொடரும் வளரும்
பள்ளியில் படித்த நினைவும்
பசுமையாய் மனதில் உலவும்

கவியாழி. கண்ணதாசன்
01.12.2020.சென்னை


Comments

 1. Replies
  1. இனிமேல் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன் .வருகைக்கு நன்றி

   Delete
 2. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன்
  தொடர்ந்து வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி,இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்