தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையில் இளமை

 முதுமையில் இளமை


ஆம்! உணரமுடிகிறது. நான் ஓய்வுபெற்று ஓராண்டு முடியவிருக்கிறது இப்போதே மனம் வலிக்கிறது .எனக்கு மட்டுமா அல்லது எல்லா ஓய்வு பெற்ற பெரும்பாலான மக்களுமே இப்படியா என்று எனக்குள் ஒரு கேள்வி   கருவாகி விட்டது. இனம்புரியாத இழப்பு என்றுதான் சொல்லுவேன்.

நான் பணியில் இருந்தபோது எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது.காலையில் நடைபயிற்சி  பின் செய்திகள் கேட்பது அடுத்து நாளிதழ் வாசிப்பு என்று ஒவ்வொன்றும் சரியாகத்தான் நடந்தது.நான் எப்போதும அலுவலக பணியாளர் வரும் முன்பே சென்றுவிடுவேன்.பெரும்பாலான  பணியாளர்கள் உங்களுக்கென்ன அய்யா மகிழுந்தில் வந்துவிடுவீர்கள் என்று என்னையே குத்திக்காட்டுவார்கள் {தாமதிற்கான காரணத்தை சொல்ல மாட்டார்கள் )

இன்றும் முயற்சிக்கிறேன் முடியவில்லை .காரணம் வெறுமை ? நாம் நல்ல துடிப்புந்தானே பணியாற்றினோம் இப்போது ஏன் நம்மால் முடியவில்லை என்று என்னும் கேள்வி கேட்டே நேரம் கடந்து செல்கிறது .ஆனாலும் உள்மனது  அடிக்கடி சொல்லும் வார்த்தை உன்னால் முடியும் வெளியே சென்று வா எதையாவது தேடு தேடிக்கொண்டே இரு.வெளியே செல்ல முடியாததன்  காரணத்தைத் தவிர 

என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் சொல்லுவேன் எனக்கு இன்னொரு பணி  இருக்கிறது  ஆம் நான்  காலத்தில் சட்டக் படித்த காரணத்தால் என்னால் வழக்குரைஞராக பணியாற்ற முடியும் என்று ,வழக்குரைஞராக பதிவு செய்து வழக்காடு மன்றத்திற்கு சென்றேன் . அங்குதான் என்னால் உணர முடிந்தது 

மேலும் .................



கவியாழி கண்ணதாசன் 

Comments

  1. தொடருங்கள் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. நல்லது... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆசி தேவை.இனிமேலும் தொடர..............

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்