Posts

Showing posts from October, 2026

தெய்வங்கள்

தெய்வங்கள்

தந்தையின் கடமை

தந்தையாய் செய்யும் கடமை தவறைத் திருத்திக் காத்தலாம் விந்தை நிறைந்த உலகில் வேடிக்கை மனிதராய் இல்லாமல் சிந்தையில் புரிந்து வாழ்ந்திட செயலால் சுட்டிக் காட்டி பந்தமும்  பாசமும் உணர்த்தி பாங்குடன் வளர்த்தவர்  வாழ்பவர் எங்கும் செல்லுகையில் இதுவும் என்பிள்ளைக்கு வேண்டுமென ஏங்கும் உள்ளமே எப்போதும் எதையும் நோக்குவார் அன்போடு வளர்ச்சியில் விதைப் போட்டு வாழ்கையை சொல்லித் தருவார் வளர்வதில் தவறெனில்  நேர்த்தியாய் வளரவே வழிகாட்டி துணைவருவார் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துவார் வளமோடு வாழ்வதைக் கண்டு வருவோர் போவோரிடம் சொல்லுவார் வந்திட்ட துயரம்  மறந்திடுவார் விந்தை மனிதனை நண்பனே விதியென்று விட்டு வாழாதே விடியும் மொருநாள்நீ  விதியென்று வீதியில் நிற்கும் காலம்வரும் சிந்தை மகிழந்து  சிறப்பாக  சேர்ந்து வாழ்ந்திடு உறவை சீர்நோக்கி வளர்ந்திடு  நீயும் சீறாவாய் சிறப்பாவாய் நன்றே

மாற்றம் உண்மைதான்

மனித இனத்திற்கு அவசியம் மாற்றம் தேவை தான்  காலை மாலை இரவு  கனவு மகிழ்ச்சி துயரம்  வேலை தவறா உணவு  வேண்டிய நேரம் தூக்கம் ஓடி உழைத்த கால்கள்  ஓய்வு கேட்கும் நேரமும் பாடித் திரிந்த நாட்களை  பள்ளிக்கி பிரிந்த உறவுகள் நேரம் தெரியாமல் நினைவிழந்து  தூரம் தெரியா பயணங்கள் துயரம் மறந்த தருணங்கள்  தூரம் சென்று விடுவதைத்தான்  துன்பம் மட்டும் தொடர்வதேன்  தூக்கம் குறைந்து வருவதேன் ? கவியாழி கண்ணதாசன்  26/09/2026

ரசித்தவர்கள்