Posts

Showing posts with the label / கவிதை/சமூகம்/ பெண்மை

தெய்வங்கள்

தெய்வங்கள்

இழிபிறவி எடுத்தவர்கள்

ஏய் இழி பிறப்பே ! உச்சகட்டவெறியோடு ஊரிலுள்ள பெண்களை துச்சமென நினைத்தே துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ பிச்சையெடுத்தாலுமுன் பிணியுணக்கு தீராது எச்சியிலை நாய்கள்போல் எக்குதப்பாய் கடித்திட்டு இச்சையினை முடித்திட்டு எவளருக்கே படுத்தாயே-தாய் மிச்சஉயிர்போகுமுன்னே மகன்வாழ வேண்டுமென்றும் பிச்சிப்போட்ட இலையைப்போல் பிரண்டியவள் தங்கையென்றே மதித்திருந்தால்  இழிவாக மடத்தனமாய் செய்வாயா ? புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை புனிதமாக எண்ண வேண்டும் இவ்வுலகில் எத்தனை நாள் இன்னும் நீ இருந்தாலும் இழிவுடனே பெரும்துயரை இணைத்து நீ வாழ்ந்தாலும் புத்திகெட்ட உன்செயலை-நீ புலம்பி நாளும் திரிந்தாலும் செத்தவனாய் நடைபிணமாய் செழிப்பிழந்து அழிவாயே செய்திட்ட தவறெல்லாம் தினமுனக்கு பகையாகி பித்தனாக திரிவாயோ பிணமாகிப்போவாயோ ! கவியாழி.கண்ணதாசன்

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே எப்போதும் நம்மைக் காத்து தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத் தொலைக்கும்  உத்தமி அவளே ஆத்திரம் மனதில் வந்தால் அதையும்  உள்ளுள் வைத்தே அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை ஆசைக் கோபமாய்க் கடிவாள் சாத்திரம் அனைத்தும் படித்து சரியெனப் பட்டதை மட்டுமே சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய் சிறந்திடப் புரிந்திட வைப்பாள் மிச்சம் மீதியைத்  தின்று மேனியைக் கெடுத்தும் நமக்காய் உச்சி முகந்தே அருகில்-தொட்டு உண்மை மகிழ்ச்சியைத் தருவாள் சீக்கிரம் எழுந்து விடுவாள் சேவைகள் பலதும் செய்வாள் சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால் சிரித்தே சமைத்துத் தருவாள் சீருடன் உடம்பை மதியாள் சீக்கிரம் தூங்க மாட்டாள் பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில் படுத்து உறங்கச் செல்வாள் அவள்தான் பெற்ற அன்னை.....

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

ரசித்தவர்கள்