தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே
இளையவர் நன்கே வளர
இன்முகம் காட்டி சிரித்தவள்
இளமை மறந்து வாழ்ந்தவள்

விடைலை வயதில் நின்றவள்
வீதியில் வீம்பாய் நடந்தவள்
வேடிக்கைப் பார்த்துச் சென்றவள்
வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள்

குடும்பம் தொடங்கி வைப்பவள்
குழந்தை சிலதைப் பெற்றவள்
குறும்புத் தனத்தை மறந்தவள்
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள்

சோதனைக் காலம் கண்டவள்
துணையுடன்  மகிழ்ந்து வாழபவள்
துயரம் மிகுந்தும் நகைப்பவள்
தூய்மை  அன்பைக் கொடுப்பவள்

ஆக்கம் கொடுத்த தாய்
அவள்தான் எனது சகோதரி
அன்பாய் இருக்கும் மனைவி
அடுத்தது எனது மகளே******கவியாழி*******

Comments

 1. வணக்கம்
  ஐயா

  கவிதையின் வரிகள் மனதை கவர்ந்தது அருமை வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ரூபன்

   Delete
 2. வணக்கம்
  தமிழ்மண வாக்கு. ok..ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஒரு பெண்ணின் பல ரூபங்களைப் பிரதிபலிக்கும் அழகிய கவிதை, கடைசி வரி மனதைத் தொட்டது...

  //குறும்பு தனத்தை மறந்தவள்//
  குறும்புத் தனத்தை மறந்தவள் என்றும்

  //தூய்மை அன்பைக் கொடுப்பவள்//
  தூய அன்பைக் கொடுப்பவள்

  என்றும் மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா...

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நன்றிங்க சரவணன்

   Delete
 4. துயரம் மிகுந்தும் நகைப்பவள்
  தூய்மை அன்பைக் கொடுப்பவள்
  மனதைத் தொட்டது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே?வருகைக்கு நன்றிங்க

   Delete
 5. அற்புதம்
  பெண்மையின் மூன்று உன்னத
  பரிமானங்களைச் சொல்லிப்போனவிதம்
  அருமை.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

   Delete
 6. பெண்மையின் கவிதை. அருமை ஐயா!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் இல்லையா?

   Delete
 7. முப்பெரும் தேவியரை போற்றிய விதம் அருமை !
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஜோக்காளி தான் ஒத்துக்கிறேன்.அதுக்காக த.ம.6 இது தவறு

   Delete
 8. த.ம.6

  பெண்களின் ஒவ்வொரு ரூபமும் சக்தியின் ஸ்வரூபமே என்று உணரவைத்த வரிகள் அற்புதம் கண்ணதாசன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மஞ்சு (லு)

   Delete
 9. /// ஆக்கம் கொடுத்த தாய்...!
  அவள்தான் எனது சகோதரி...!!
  அன்பாய் இருக்கும் மனைவி...!!!
  அடுத்தது எனது மகளே.. //


  அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தனபாலன்

   Delete
 10. Replies
  1. நானும் மகிழ்ந்தேன்

   Delete
 11. இளமை மறந்து வாழ்ந்தவள் - தாய்
  வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் - சகோதரி
  குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் - மனைவி
  தூய்மை அன்பைக் கொடுப்பவள் - மகள்
  என
  எங்க தாய்க் குலம் பற்றி
  உங்க எண்ணங்களை வரவேற்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. பெண்மையின் உண்மை .தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
 12. மிக அருமை ஐயா...

  ReplyDelete
 13. தாயைப் பற்றி மட்டும் சொல்கிறீர்கள் என்று நினைத்துப் படித்தேன். கடைசிப் பத்தி புத்தி சொன்னது! :))

  ReplyDelete
  Replies
  1. கடைசிவரை படிக்க வேண்டும் .இறுதியில் உறுதியான கரு இருக்கும்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more