Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/பதிவர்

தெய்வங்கள்

தெய்வங்கள்

மூத்தப் பதிவர்.புலவர்.இராமானுசம்

Image
(அய்யா புலவர் இராமானுசம்) வயதில் மூத்த பதிவர் வளமைக் கொண்டகவிஞர் இளமை பருவம் முன்பிருந்தே இனிமைத் தமிழைப் படித்தறிந்தே தெளிந்த நடையில் கவிபடைக்கும் தேர்ந்த கவிதைப் புலவராவார் வலையில் வருவார் போவோரை வயதைப் பார்த்துப் பேசாமல் உறவாய் வலையைப் போற்றியே உடனே படித்துப் பார்த்துமே புரிந்தால் மட்டும் கருத்துகளை பதியத் தயங்கிட மாட்டார் உதவி என்று கேட்போரை உடனே அழைத்துப் பேசிடுவார் நிலைமை நன்கே புரிந்தவுடன் நிறைய உதவிகள் செய்திடுவார் துணையை இழந்தும் மறவாமல் தினமும் எண்ணிக் கலங்கிடுவார் மகளைப் பெற்ற தாயாக மகிழ்ந்தும் இன்றும் வாழுகின்றார் என்னையும் மதித்துப் பாங்குடனே என்றும் அறிவுரை சொல்லிடுவார் அன்னை போன்ற என்மகளை அன்பாய் பேத்தி என்றிடுவார் இவரைப் போலப் பதிவுலகில் எல்லாப் பதிவரும் இருப்பீரே எழிலாய் தமிழைப் போற்றியே இணைந்தே மகிழ்ந்தே வருவீரே (கவியாழி)

ரசித்தவர்கள்