Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்று அம்மாவாசை

Image
காலையில் எழுந்ததும் கடமையாக செய்வது மனதில் கருத்தாய் நிறுத்தி நினைவில் வைத்து இறந்த பெற்றோரை நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்! இந்த நாளில் மட்டும் சொந்த நாளாய் நினைகிறேன் பிள்ளை பருவத்தை மெல்ல நினைக்கிறேன் சொல்ல வார்த்தையில்லை சொல்வதில் வெட்கமில்லை சின்ன பிள்ளைபோல சாகும்வரை அன்புடன்  இருந்ததை! எப்போதும் உண்மையான எள்ளளவும் குறையாத அன்பினை உள்ளமெங்கும் உள்ளதை உள்ளபடி நினைத்து அழுகின்றேன்!!! ஒருபொழுது பட்டினியாய் உங்களை நினைத்து மடிகிறேன் எள் தண்ணியிட்டு எனது இறந்தோரை நினைத்து நல் மனதோடு நினைதிட்டு  நாள் முழுதும் விரதமும் உங்களை நினைத்து உளமாற நினைக்கும் நாள் இந்த  நாள் மட்டும் இமைகளுக்கு  இருப்பதில்லை உறக்கம் என்றுமே மறந்ததில்லை உங்களின்  அன்பான ஏக்கம்

அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?

Image
http://tamilmanam.net/ உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வ

நாய்க்குட்டி.....செல்லமே.

Image
  மனிதன்  என்னை மதிக்கா விட்டாலும் மண்டி இட்டு நன்றி சொல்லும் மனதுள் என்னையே தினம் நோக்கும்-மகிழ்ச்சியாய் மதித்து வாலாட்டி நன்றி செய்யும் என்னைப் பார்க்க யார் வந்தாலும் முன்னே வந்து முறைத்து நிற்கும் பின்னே சென்று சுற்றி வந்து-முகர்ந்து பின்னங் கால்களை ஒட்டி நிற்கும் கருப்பாய்  நிறம் கொண்டிருந்தாலும் அது பொறுப்பாய் தான் இருக்கும் அருமையாக வெறுப்பாய் நான் திட்டி சொன்னாலும்-நகராது வெகு அருகில் நின்று கொண்டிருக்கும் செல்லமாய் சீண்டி அதட்டி விட்டால் சீக்கிரம் பயந்து குரைத்து விடும் ஆத்திரம் கொண்டு அடித்து விட்டால்-பிறரை அடுத்த நொடியே கடித்து விடும் பொன்னை  பொருளை காத்து நிற்கும் புதிதாய் இருந்தால் நுகர்ந்து செல்லும் மண்ணையும் மனதில் பதிந்து கொண்டு-நினைவாய் மண்டியிட்டு உடனே  நக்கி திண்ணும் தூங்கும் போதும் அதன் கவனம் துணையாய் மட்டும் தான் இருக்கும் நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை உள்ளபடி  சொல்வ தென்றால் ஒவ்வாமை பெற்றோரும் நண்பர்களும் மனைவியும் மகளும் மற்றோரும் மறந்தாலும் மறவேனே உன்னை உற்ற  நண்பநென பற்றோடி ருப்பேன்-இன்பமாய்  உயிருள்ளவரை உன்னை  நன்ற

முதுமையின் ஏக்கம்

Image
அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

காதலா? காமாமா? நட்பா?

Image
   விழியோடு மொழிபேசி விரலாலே கோலமிட்டு புரியாத  வார்த்தையாலே புதிராக சேர்ந்து பேசி பதியாத  நட்போடு பரிதவிப்பில் கலந்து இதழோடு இதழ் இரண்டுமே  சண்டைபோட்டு இனிமை போற்றி இனிமையான தருணமாக்கி முனகலும் முக்கலும் முகமிறுக்கி நக்கலும் கனி இரண்டையும் கசக்கி சுவைத்து இடையிடையே இணைந்து முடிவில்லா ஆனந்தமாய் முடிந்தவரை  நாதமாக்கி முடியாமல் முடிதிட்டு முகமிரண்டும் பார்த்தால் முடியாது  இன்னும் வேண்டும் மொழி தெரியா மௌனமாய் முடிதிட்டால் என்ன சொல்ல காதலா? காமாமா? நட்பா?..............

முதல்நாள் இரவு

Image
  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வரை  எரிந்தும் நலுங்கு நாட்டியமும்-கச்சேரி நாளெல்லாம்  பெரு விருந்தாய் விடியும்முன் எழுந்து விமரிசையான சடங்குகளுடன் காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி மாலை மாற்றி  மகிழ்ந்தேன் தாலிகட்டி தவம் கலைத்தேன் தைரியமாய் அருகில் அமர்ந்தேன் நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான நலபாகத்துடன் விருந்து படைத்து சேலைமாற்றி சிவந்த முகத்துடன் சொம்பில் பாலுடன் நடந்தேன் மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய் ஆளை பார்த்தேன்  ஆர்வமாய் தோளை பிடித்து தொட்டதும் துவண்டு விழுந்தேன் சரிந்தேன் துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும் தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்

மெல்ல பேசும் செல்ல கூட்டம்

Image
  துள்ளி யோடி துரத்தி பிடித்து மெல்ல வந்து பல்லை காட்டி சொல்மாய்  சிணுங்கி மெல்ல ஓடிடும் மின்னலென ஓடி மேகமாய் மறைந்திடும் பிள்ளை மொழி பேசியே பிடிசோறும் திண்ணிடும் தொல்லை என்ற வார்த்தையே மெல்ல நம்மை ஈர்திடும் இல்லையென்று சொல்லாமல் இன்பமேங்கும் தந்திடும் பிள்ளை கூட்டம் பிரச்சனைகளின் கூடாரம் இல்லை  அதுபோல் இன்பமான மழை நேரம்

ரசித்தவர்கள்