தெய்வங்கள்

தெய்வங்கள்

மெல்ல பேசும் செல்ல கூட்டம் 

துள்ளி யோடி
துரத்தி பிடித்து

மெல்ல வந்து
பல்லை காட்டி

சொல்மாய்  சிணுங்கி
மெல்ல ஓடிடும்

மின்னலென ஓடி
மேகமாய் மறைந்திடும்

பிள்ளை மொழி பேசியே
பிடிசோறும் திண்ணிடும்

தொல்லை என்ற வார்த்தையே
மெல்ல நம்மை ஈர்திடும்

இல்லையென்று சொல்லாமல்
இன்பமேங்கும் தந்திடும்

பிள்ளை கூட்டம்
பிரச்சனைகளின் கூடாரம்

இல்லை  அதுபோல்
இன்பமான மழை நேரம்


Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more