Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியொழுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!! (கவியாழி)

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனைநோக்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உன்னுடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனியாக  தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

மலிவான மனசாட்சி

 நடுஇரவில் நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு நண்பர்களுன் பயணித்த 23 வயது மாணவியை கதறக்கதற கற்பழித்த குற்றவாளிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது .-செய்தி (குற்றவாளி : மாணவியா? அவரின் பெற்றோரா? நண்பர்களா? குற்றவாளிகளா? அரசாங்கமா?சமூகமா?)                                      """""""""""""""""""" மலிவாக மனசாட்சி மறைந்து கிடக்க மக்களும் எதையெதையோ தேடி சேர்க்க புத்தகம் போதனை சொல்லி இருந்தும்-புத்தியின்றி புலப்படுதே பெண்ணினம் இன்னும் வதைபடுதே பணம் வேண்டி  பலதவறும் பாவிகளை பண்கெட்டு  கேடுகளை செய்ய தூண்டி குணம் கெட்டு குலநாசம் செய்யுதே - மனதில் குடிகொள்ளுதே குற்றமாய் பிழை செய்யுதே சிறுபிள்ளை வாழ்வுதனை சூறையாடி செய்கின்ற தவறுகள் தொடர்கின்றதே சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு சிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே படிப்பிருந்தும் பாவி மக்கள் பயணிப்பதே பகல் பொழுதை தாண்டியும் தொடர்கின்றதே தடைசெய்த  பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம் விடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே

மார்கழிப் பூவோ

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே   வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை   நடந்துந்துவர முகம்   தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி பயந்து   வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் ஓசை மலைச்சாரல்   தூறல்போல பனித்துளியும்   முகமலர்ந்த நீ மார்கழிப் பூவோ.....

வேள்விக்கு வருவாயா?

சந்தனத்தில் சிலைவடித்து சவ்வாது நீறு பூசி வாசமலர்போல் வானெங்கும் வாசமெங்கும் வீசுகின்ற ஈசன் மகளா ? மான் கூட்டமெல்லாம் மயங்கி மண்டியிட்டு நிற்கும் மயில் கூட்டமோ ? மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும் மங்கையுனைப் பார்த்ததாலா ? சிற்றுடல் மங்கையே சிவந்த நிற மங்கையே பற்றுதலாய் கேட்கிறேன் பாசத்துடன் வருவாயா பக்கம் வந்து அணைப்பாயா ? ஏன்  மறுக்கிறாய் ஏதோ மழுப்புகிறாய் இன்னும் ஏன் வெட்கம் என்றும் நமக்கே சொர்க்கம் வேள்விக்கு வருவாயா?

மதமா? மானுடமா?

மானுடத்தை மதம் மதிக்கிறதா மறுக்கிறதா புதுமையான தமிழ் சாதி போற்றுமே சம நீதி ஏழைப் பணக்காரன் என்பது தானே விதி கோழைகள் காண்பது கொள்ளை அடிப்பது ஏழையை ஏய்த்து சுரண்டி பிழைப்பது ஏவிவிட்டு எதிரியாய் என்றும்  பகை வளர்ப்பது தேடிப்பாருங்கள் மனதில் தெளிவு பிறக்கும் வேடிக்கை பார்க்காமல் வேதனையை வளர்க்காமல் வாழ விடுங்கள் வாழ்கையை  மகிழ்ச்சியாக

திசையெங்கும் முழங்கி வா தமிழே

துன்பத்தை தொலைத்தது  போல் துள்ளி விளையாடி வரும் கள்ளவிழி  நங்கை கவிங்கர்களுக்கோ தங்கை அவளோ தமிழ் கங்கை உலகமெல்லாம் ஓடி உன்புகழ் பாடி கலகமும் கஷ்டமும் மறந்தே நிலைக்கொள்ளா ஆனந்தம் நின் மடியில் கிடைக்குதடி இலைபோட்டு விருந்தை எந்நாளும் தருமுனக்கு சிலை வடித்து இருக்கிறேன் சிரித்தோடி வந்திடு என்னோடு தங்கிடு படை கூட்டி பாவை உன்னை அழிக்க படுபாவி நினைத்தாலும் விடைகொடுக்கும் நேரமிது விரைந்து வா விடியலைத்தா அலை கடந்து தவிக்கும் கொடியுறவு தமிழனுக்கு திரைகடல் தேடி தேசமதைத் தருவேன்   என திசையெங்கும் முழங்கி வா www.kaviyazhi.com

ரசித்தவர்கள்