தெய்வங்கள்

தெய்வங்கள்

வேள்விக்கு வருவாயா?

சந்தனத்தில் சிலைவடித்து
சவ்வாது நீறு பூசி
வாசமலர்போல் வானெங்கும்
வாசமெங்கும் வீசுகின்ற
ஈசன் மகளா ?

மான் கூட்டமெல்லாம்
மயங்கி மண்டியிட்டு நிற்கும்
மயில் கூட்டமோ ?
மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும்
மங்கையுனைப் பார்த்ததாலா ?

சிற்றுடல் மங்கையே
சிவந்த நிற மங்கையே
பற்றுதலாய் கேட்கிறேன்
பாசத்துடன் வருவாயா
பக்கம் வந்து அணைப்பாயா ?

ஏன்  மறுக்கிறாய்
ஏதோ மழுப்புகிறாய்
இன்னும் ஏன் வெட்கம்
என்றும் நமக்கே சொர்க்கம்
வேள்விக்கு வருவாயா?

Comments

 1. Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றிங்க

   Delete
 2. ஏன் மறுக்கிறாய்
  ஏதோ மழுப்புகிறாய்
  இன்னும் ஏன் வெட்கம்
  >>
  பாவம் அண்ணி.

  ReplyDelete
  Replies
  1. நானும் பாவப்பட்ட ஜென்மம்தான் ,வருகைக்கு நன்றி

   Delete
  2. காதல் வேள்விக்குத்தான் தான் அழைத்தேன்

   Delete
 3. வெட்கம் பெண்களின் உடன் பிறப்பன்றோ!நன்று கண்ணதாசன்!

  ReplyDelete
 4. வெட்கப்படுவது பெண்களுக்கு அழகு ,விருப்படுவது ஆண்களின் இயல்பு

  ReplyDelete
 5. நம்பிகையுடன் இருங்கள் நிச்சயம் வருவாள்...:)

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா நண்பரே ம்..ம்ம்ம்

   Delete
 6. வார்த்தை கோர்வை அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,வந்தமைக்கும் கருத்து பதிவு தந்தமைக்கும்

   Delete
 7. "வேள்விக்கு வருவாயா "
  வித்தியாசமான வார்த்தைப் பிரயோகம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய வார்த்தைகள் கையாள வேண்டுமென நினைக்கிறேன்

   Delete
 8. கேட்டுப் பெறுவது காதலில் இனிமை!
  கேட்டால் தருவது காதலி கடமை!
  இன்பம் என்பது இருவரின் உரிமை!
  எவர்கேட்டாலும் இளமைக்குப் பெருமை!
  -கவியரசர்!

  ReplyDelete
 9. நன்றின் வந்ததுக்கும் கவிஞர் பாட்டு தந்ததுக்கும்

  ReplyDelete
 10. Replies
  1. நன்றி ஹேமா. நாளானாலும் படித்ததுக்கு

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more