தந்தையின் கடமை
தந்தையாய் செய்யும் கடமை
தவறைத் திருத்திக் காத்தலாம்
விந்தை நிறைந்த உலகில்
வேடிக்கை மனிதராய் இல்லாமல்
சிந்தையில் புரிந்து வாழ்ந்திட
செயலால் சுட்டிக் காட்டி
பந்தமும் பாசமும் உணர்த்தி
பாங்குடன் வளர்த்தவர் வாழ்பவர்
எங்கும் செல்லுகையில் இதுவும்
என்பிள்ளைக்கு வேண்டுமென
ஏங்கும் உள்ளமே எப்போதும்
எதையும் நோக்குவார் அன்போடு
வளர்ச்சியில் விதைப் போட்டு
வாழ்கையை சொல்லித் தருவார்
வளர்வதில் தவறெனில் நேர்த்தியாய்
வளரவே வழிகாட்டி துணைவருவார்
வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துவார்
வளமோடு வாழ்வதைக் கண்டு
வருவோர் போவோரிடம் சொல்லுவார்
வந்திட்ட துயரம் மறந்திடுவார்
விந்தை மனிதனை நண்பனே
விதியென்று விட்டு வாழாதே
விடியும் மொருநாள்நீ விதியென்று
வீதியில் நிற்கும் காலம்வரும்
சிந்தை மகிழந்து சிறப்பாக
சேர்ந்து வாழ்ந்திடு உறவை
சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
சீறாவாய் சிறப்பாவாய் நன்றே
தவறைத் திருத்திக் காத்தலாம்
விந்தை நிறைந்த உலகில்
வேடிக்கை மனிதராய் இல்லாமல்
சிந்தையில் புரிந்து வாழ்ந்திட
செயலால் சுட்டிக் காட்டி
பந்தமும் பாசமும் உணர்த்தி
பாங்குடன் வளர்த்தவர் வாழ்பவர்
எங்கும் செல்லுகையில் இதுவும்
என்பிள்ளைக்கு வேண்டுமென
ஏங்கும் உள்ளமே எப்போதும்
எதையும் நோக்குவார் அன்போடு
வளர்ச்சியில் விதைப் போட்டு
வாழ்கையை சொல்லித் தருவார்
வளர்வதில் தவறெனில் நேர்த்தியாய்
வளரவே வழிகாட்டி துணைவருவார்
வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துவார்
வளமோடு வாழ்வதைக் கண்டு
வருவோர் போவோரிடம் சொல்லுவார்
வந்திட்ட துயரம் மறந்திடுவார்
விந்தை மனிதனை நண்பனே
விதியென்று விட்டு வாழாதே
விடியும் மொருநாள்நீ விதியென்று
வீதியில் நிற்கும் காலம்வரும்
சிந்தை மகிழந்து சிறப்பாக
சேர்ந்து வாழ்ந்திடு உறவை
சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
சீறாவாய் சிறப்பாவாய் நன்றே
சிந்தை மகிழந்து சிறப்பாக
ReplyDeleteசேர்ந்து வாழ்ந்திடு உறவை
சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
சீறாவாய் சிறப்பாவாய் நன்றே
>>
சிறப்பான அப்பாக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றி
Deleteவிடியும் மொருநாள்நீ விதியென்று
ReplyDeleteவீதியில் நிற்கும் காலம்வரும்//
இதை நம்மில் பலரும் மறந்துவிடுவதுதான் வேதனை!
அப்பனையும் ஆத்தாளையும் மறந்து யாரும் நிம்மதியாய் வாழ்வதில்லை
Deleteஇனிய வாழ்த்து.
ReplyDeleteVetha.Elangathilakam
வாழ்த்துக்கு நன்றி
Delete"உறவை சீர்நோக்கி வளர்ந்திடு நீயும் சிறப்பாவாய் " கருத்துமிக்க வரிகள்.
ReplyDeleteஉண்மைதான் நன்றிங்கம்மா.
Deleteஅடி சீர் விளங்க அழகாக எழுதியுள்ளீர்கள்...
ReplyDeleteசிறப்பு...
மகிழ்ச்சி.தொடர்ந்து வாருங்கள்
Deleteதந்தையின் கடமையை அழகாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்
ReplyDeleteஅனுபவமாச்சே? எப்படி சொல்லாமல் இருக்க முடியும்
Deleteநம்மல்லாம் ஒரு வகையில் அதிர்ஷ்ட சாலிகள்..நம் சமூகத்தில் "அனாதைக் குழந்தைகளாக்கப்பட்ட" குழந்தைகளின் பொறுப்பற்ற தந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது..
ReplyDeleteஉண்மைதான் .விவேகமற்றவர்களின் விபரீத செயல்
Deleteவணக்கம்
ReplyDeleteசிந்தை மகிழந்து சிறப்பாக
சேர்ந்து வாழ்ந்திடு உறவை
சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
சீறாவாய் சிறப்பாவாய் நன்றே
அருமையான வைர வரிகள் அப்பாவுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரூபன்
Deleteவிந்தை உலகில்
ReplyDeleteதந்தையின் அருமையினை
சிந்தை கொள்ள
தந்தமைக்கு வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteதந்தையின் கடமை தளராமல்க் காத்திடெனச்
ReplyDeleteசிந்தை நிறைக்கும் சிறந்த சிந்தனை!
வாழ்த்துக்கள் சகோ!
வாழ்த்துக்கு நன்றி சகோ
Deleteவிந்தை மனிதனை நண்பனே
ReplyDeleteவிதியென்று விட்டு வாழாதே
விடியும் மொருநாள்நீ விதியென்று
வீதியில் நிற்கும் காலம்வரும்
நன்றாகச் சொன்னீர் ஐயா.நன்றி
நடக்குமென்பதை நாம் சொல்லுதல் கடமையன்றோ
Deleteதந்தையின் கடமையையும், பிள்ளைகளின் பொறுப்பையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்கம்மா
Delete