தெய்வங்கள்

தெய்வங்கள்

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர்
கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர்
நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும்
நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர்

வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார்
வழித்துணை யாருமே வந்திட மாட்டார்
வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும்
வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார்

கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர்
கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர்
பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும்
பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர்

ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்

கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால்
கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால்
வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம்
வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார்

இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து
முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்



******கவியாழி******



Comments

  1. இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
    எதிர்கால தேவைக்கு வழி அமைத்து
    முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
    முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்

    நல்ல வேண்டுதல்..!

    ReplyDelete
  2. வாழ்ந்தாலும் ஏசும் ,தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ...பாட்டை நினைவு படுத்தியது உங்கள் கவிதை !

    ReplyDelete
  3. அழகு கவியில் அசத்தல் அட்வைஸ்.

    ReplyDelete
  4. உண்மை வரிகள்... முடிவில் நல்ல கருத்துக்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அட்வைசை அள்ளி சென்ற கவிதை நன்று

    ReplyDelete
  6. முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்....

    நல்லதொரு கவிதை

    ReplyDelete
  7. எத்தனை ஆழமான கருத்துச் செறிவுள்ள கவிதை!! இந்த மானுட உலகத்தைப் பற்றிய அருமையான கவிதை!!

    ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
    ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
    ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
    ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்

    கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால்
    கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால்
    வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம்
    வணங்கியே கடவுளாய் நன்றி சொல்வார்

    இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
    எதிர்காலத் தேவைக்கு வழி அமைத்து
    முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே
    முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர்

    நல்ல வரிகள்!!

    ReplyDelete
  8. ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார்
    ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார்
    ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில்
    ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார்.........எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    கருத்துள்ள கவிதை முடிவு மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா
    த.ம 8வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. யதார்த்தம் சொல்லும் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. "கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் என்ன பயன்?" என்ற விளக்கம் அழகாக வெளிப்படுகிறது.

    ReplyDelete
  13. என் ஓய்வில்...உங்கள் பிளாக்கில் உள்ள படம் மாதிரி ஒரு கிராமத்தில் வாழ ஆசைப்படுகிறேன்!

    அந்த படத்தை பார்த்தாலே பரவசம் ! இது மாதிரி கிராமம் இருந்தால் சொல்லுங்கள்!

    தமிழ்மணம் +1

    ReplyDelete
  14. நல்ல வேண்டுதல் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இன்றைய யதார்த்தம் நன்றி ஐயா
    த.ம.12

    ReplyDelete
  16. ''..இயன்றதைக் கொடுத்து உதவி செய்து
    எதிர்காலத் தேவைக்கு வழி அமைத்து..''
    புத்திமதிகள் வாழ்விற்கு உதவினும் கேட்பவர் ஓரு சிலரே.
    மிக்க நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. கருத்துள்ள கவிதை.......

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more