தெய்வங்கள்

தெய்வங்கள்

எம்மன வேதனை யாரரிவார் ?திண்ணையில்  அமர்ந்த நாளிலன்று
தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ
விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள்
வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார்

மண்ணையே தேடியே மக்களும் செல்ல
மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல
பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே
தன்னையே காக்க தனியே செல்கிறார்

இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ
இளமையை முதுமை இணைந்து கொண்டதோ
துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா
தேடித்தேடி மக்களைக் கொல்வதா

என் மன வேதனை யாரறிவார்
என்னையும் அணைத்திட யார் வருவார்
சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில்
சொர்கமும் தேடியே யார் செல்வார்
கவியாழி.கண்ணதாசன்
26.06.2020

Comments

 1. இதுவும் கடந்து போகும்ண்ணே

  ReplyDelete
  Replies
  1. சகோ நலமா ? போகலாம் தொடர்ந்து

   Delete
 2. நடையாய் நடப்போரை நினைத்துக் கொள்ளுங்கள்....

  ReplyDelete
 3. அனைவருக்கும் சிரமம்...

  ReplyDelete
  Replies
  1. சோதிடமும் சரியில்லை

   Delete
 4. Replies
  1. எல்லோருமே இதே நிலை

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்