தெய்வங்கள்

தெய்வங்கள்

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

எங்கும்போகலை எதையும் பார்க்கல
எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை
தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய்
தினமும் தூக்கியும் பொழுது கழியிலே

கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை
காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே
உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும்
ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை

கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை
கொண்ட உறவும் நீண்ட பிரிவால்
கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்
 கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை

எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை
எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை
சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட-
சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை

எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை
ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை
சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில்
செலவு செஞ்சிட பணமும் கையில்லை

கவியாழி.கண்ணதாசன்
27.06.2020

Comments

 1. அட! இந்தப் பதிவைப் படிக்கும்போதும் எனக்கு தூக்கம் வருது. ஏன்னா பொழுதுபோகாம இரவெல்லாம் தோழிகளுடன் அரட்டை. அழகான கவிதை. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி.மேலும் எனது படைப்பிலுள்ள மற்றத்தையும் படித்துப்பாருங்களேன்

   Delete
  2. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.மற்ற பதிவுகளையும் படித்துச் சொல்லுங்களேன்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்