வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும் துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு நாட்களை கடத்தி நமக்கென்ன பயன் நாமிங்கு இணைவதால் என்ன பிழை பூக்களை போல் நீ வாடுவதை- புரிந்தும் ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே தூங்கி எழுந்ததும் துணை தேடிடும் ஏங்கி இழந்ததை நாடிடும் இன்பம் தாங்கித்தான் இருப்பேனே துணையாக-என்றும் பாங்கி உன்னை பார்த்திடுவேன் நலமாக நிலவுக்குள் நாம் நடந்தால் நிம்மதி நேரம் செல்லும் முன்னே சொல்லடி ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை தூரம் அதிகமில்லை துணிந்து நில்லடி நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும் உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும் கனவு மீண்டும் உன்னை துரத்தி- இறுதி காலம் முடியுமுன் ஆசையை நிறுத்தி உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார் சொல்லென சொல்லி சிதைத்துடுவார் நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி இல்லறமாக கிடைக்க நான் ஏங்குகிறேன்